WhatsApp Image 2024 06 29 at 1.25.49 PM2024.06.29ஆந் திகதி தென் மாகாணத்தின் பல கடற்றொழில் துறைமுகங்களின் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், தற்போது தென் மாகாணத்தின் மிகப் பெரிய கடற்றொழில் துறைமுகமான கந்தர கடற்றெழில் துறைமுகத்தின் பணி நடவடிக்கைகள் இந்த வருடத்துக்குள் நிறைவு செய்து மீனவர்கள் கடலுக்குச் செல்வதற்குத் தேவையான வசதிகள் ஏற்பாடு செய்யப்படும் எனத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், தென் மாகாணத்தின் பிரதான துறைமுகங்களில் ஒன்றான கந்தர மீன்பிடித் துறைமுகத்தின் நவீனமயப்படுத்தல் மற்றும் அபிவிருத்தி செய்யும் நடவடிக்கை இற்றைக்கு 03 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டதுடன், அண்மைக் காலமாக பொருளாதார நெருக்கடி மற்றும் கொவிட் தொற்று காரணமாக இதன் பணி நிறுத்தப்பட்டிருந்தாலும் அதிமேதகு ஜனாதிபதி ஆட்சிக்கு வந்த பின்னர் நாட்டின் பொருளாதார அபிவிருத்தியுடன் இந்த மீன்பிடித் துறைமுகத்தின் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது பெரும்பாலான பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதுடன், முதற் கட்ட பணிகள் இன்னும் இரண்டு, மூன்று மாதங்களில் அனைத்து பணிகளும் நிறைவு செய்யப்பட்டு மீனவர்கள் கடலுக்குச் செல்வதற்கு வசதிகள் செய்து தரப்படும் எனத் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர், இங்கு அடுத்த கட்டத்தை மிக விரைவாக முடிப்பதற்குத் தேவையான ஒதுக்கீடு அதிமேதகு ஜனாதிபதி அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், துறைமுகத்தின் பணிகளை துரிதமாக முடிக்கப்பட்டு பிரதேசத்தின் மீனவ மக்களுக்கு பெரும் சேவையை வழங்கும் வகையில் இந்த துறைமுகம் அபிவிருத்தி செய்யப்பட்டு மீனவ மக்கள் கடலுக்குச் செல்வதற்கு இடம் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.

இச்சந்தர்ப்பத்தில் அமைச்சின் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் தற்போதைய மின்சக்தி அமைச்சருமான திரு காஞ்சன விஜேசேகர அவர்கள் கலந்துகொண்டார் அத்துடன் அவர் இங்கு கூறியபோது, தென் மாகாணத்தின் மிகப் பெரிய நிர்மாண பணியான இந்த கடற்றொழில் துறைமுகம் நிரமாணிப்பது தொடர்பாக அதிமேதகு ஜனாதிபதி உட்பட நிதி அமைச்சுக்கும், கடற்றொழில் அமைச்சுக்கும் தமது ஆழ்ந்த நன்றிகளைத் தெரிவிப்பதாகவும், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் அதீத  முயற்சியினால் இந்த செயற்பாடுகளை மிக விரைவாக முன்னெடுத்த அவருக்கும் தனது நன்றிகளையத் தெரிவித்துக் கொண்டார்.

இங்கு நில்வெல்ல, சுதுவெல்ல, காலி உட்பட பல மீன்பிடித் துறைமுகங்களையூம் கடற்றொழில் அமைச்சர் பார்வையிட்டார். ஆவைகளின் சகல குறைபாடுகளையும் நிவர்த்தி செய்வதற்கு கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திரு நிஸாந்த விக்ரமசிங்கஇ துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்தின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்      

WhatsApp Image 2024 06 29 at 1.25.55 PM

WhatsApp Image 2024 06 29 at 1.25.49 PM 1

சமீபத்திய செய்திகள்

Youtube