fishing trawler 6

கடந்த 05 மாதங்களுக்கு முன்னர், சிலாபம் கடலிருந்து அரபிக் கடலுக்கு மீன்பிடி நடவடிக்கைக்காகப் புறப்பட்டுச் சென்ற லோரன்ஸ் புத்தா எனும் பன்னாட் மீன்பிடிப் படகு மற்றும் அதிலிருந்த மீனவர்களும் சேமாலியா கடற் கொள்ளையர்களால், பிடிக்கப்பட்டனர்.

பின்னர் சீ செல்ஸ் கரையோர காவல் படையினரால் அப்படகு மற்றும் அதிலிருந்த மீனவர்களும் விடுவிக்கப்பட்டனர் பின்னர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த அவர்களின் தலையீட்டினால் சீ செல்ஸ் அரசுடன் மேற்கொள்ளப்பட்ட முயற்சியினால் அந்த மீனவர்கள் மற்றும் அப்படகு விடுவிக்கப்பட்டதுடன் 02 வாரங்களுக்கு முன் அந்த மீன்பிடிப்படகு இலங்கையை நோக்கி தமது பயணத்தை ஆரம்பித்தது. 23.06.2024ஆந் திகதி திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்தை அண்மித்த இந்த படகின் மீனவர்களிடமிருந்து கடற் படைக்கு செய்தி கிடைத்த பின் அவர்களும் படகும் விடுவிக்கப்பட்டது.

இதற்கமைய இந்த மீனவர்கள் நேற்று உறவினர்களுடன் தமது வீட்டுக்குச் சென்றதுடன், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த அவர்கள் தமது தமது கோரிக்கைகளைக் கேட்டறிந்தபோது சீ செல்ஸ் அரசாங்கத்திடமிருந்து விடுவிப்பதற்கு தலையிட்டதாகவும், அவர் இது தொடர்பாக அமைச்சரவையின் கவனத்துக் கொண்டு சென்று வெளிநாட்டு அமைச்சுடன் இணைந்து அமைச்சரவைப் பத்திரம் ஒன்றைத் தயாரித்து  சீ செல்ஸ் அரசுக்கு அனுப்பி மீனவர்களின் அனைத்துப் பொறுப்புகளையூம் ஏற்று அவர்களைய விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டதோடு, அதற்கமைய  தமது உறவினரும் மீன்பிடிப் படகும் விடுவிக்கப்பட்டதாகவூம் குறிப்பிட்டனர். மேலும் இக்காலப் பகுதியில் சீ செல்ஸ் நாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மீனவர்களுக்கு அமைச்சின் தலையீட்டினால் உதவிகள் கிடைத்ததோடு, அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கு உதவிகளும் கிடைத்ததாகவும், இதற்காக இந்த மீனவர்களின் உறவினர்கள் அமைச்சுக்கு தமது நன்றிகளைத் தெரிவித்தனர்.          

சமீபத்திய செய்திகள்

Youtube