mini

IMULA0909TLE எனும் பதிவிலக்கம் கொண்ட “டேவன் புத்தா 05” எனும் பெயர் கொண்ட பன்னாட் படகின் படகோட்டி மற்றும் பணியாளர்கள் கடலில் மிதந்து வந்த போத்தலில் இருந்த திரவத்தை குடித்தமையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களின் உறவினர்களின் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்தா.

2024.06.29ஆந் திகதி தென்மாகாணத்தின் கடற்றொழில் துறைமுகங்களின் அபிவிருத்தி நடவடிக்கை குறித்து ஆராய்வதற்கான பயணத்தை மேற்கொண்டிருந்தபோது இது தொடர்பாக தனக்கு அறிய முடிந்ததாகவும், இச்சந்தர்ப்பத்தில் தனக்கருகில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர், திரு நிஸாந்த விக்ரமசிங்க மற்றும் இது சம்பந்தப்பட்ட சகல அதிகாரிகாரிகளுக்கும் அறிவித்து, இந்த விடயம் தொடர்பாக ஆராய்ந்து பார்த்து அவர்களைக் கரைக்கு கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சருக்கு பணிப்புரை விடுத்ததாக தெரிவித்தார்.

இங்கு MRCC எனும் பதிவிலக்கம் கொண்ட படகு இப் படகை நெருங்கியபோது அவர்கள் இந்த துயர மரணங்கள் குறித்த மேலதிக விபரங்களை கடற்றொழில் திணைக்களத்துக்கு தெரிவித்தனர். இங்கு கடற்படை மருத்துவர் ஒருவரை வானொலி மூலம் தொடர்பு கொண்டு தேவையான மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டன. உயிர் பிழத்தவர்களுக்கு முதலுதவி அளிக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது.     

எனினும்  டேவன் புத்தா 5 படகில் இருந்த படகு கண்காணிப்பு இடர் பொத்தானை அழுத்தப்படவில்லை என்பதும் ஒரு வேதனையான விடயமாகும். அவ்வாறு அழுத்தி எங்களுக்கு அறிவிக்கப்பட்டிருப்பின் மீட்பு பணிகளை விரைவில் ஆரம்பித்திருக்கலாம். 

டேவன் புத்தா 5 படகு தரையிலிருந்து 360 கடல் மைல்கள் அதாவது 600 கிலோ மீற்றர் மேலான துhரத்தில் பயணித்துள்ளது. அத்துடன் இலங்கை விமானப் படையின் ஹெலிகப்டர் இவ்வளவு துhரத்தில் பறக்க முடியுமா என பார்த்தனர், ஆனால் ஹெலிகொப்டர் பயணிக்கக் கூடிய துhரம் அது 4 மடங்காக இருந்தமையால் அம்முயற்சி வீணாணது.

எவ்வாறாயினும், தற்போது கடற்படை படகொன்று டேவன் புத்தா 5 படகுக்கருகில் பயணித்து, உயிர் பிழைத்த நபர் ஒருவர் கரைக்கு கொண்டு வரப்பட்டு தற்போது அவர் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த மிகவூம் சோகமான சம்பவம் தொடர்பில் அனுதாபத்துடன் உயிரிழந்த படகோட்டி மற்றும் மீனவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கை எடுத்து வருவதாகவூம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.    

சமீபத்திய செய்திகள்

Youtube