கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் மூலம் நாடளாவிய ரீதியில் நிறுவப்படும் நவீன மீன் விற்பனை நிலைய சங்கிலித் தொடரில் நவீனமயப்படுத்தப்பட்ட கிளை கடவத்த கொழும்பு – கண்டி பிரதான நெடுஞ்சாலையில் இல. 457 கொண்ட இடத்தில் (நிக்காடோ கட்டிடத்துக்கு எதிரில் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அடுத்தாக) கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் திரு பியல் நிஸாந்த த சில்வா தலைமையில் சுபவேளையில் திறந்து வைக்கப்பட்டது.
வாடிக்கையாளர்களுக்கு உயர்ந்த சேவையை வழங்கும் நோக்கில் இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் மீன் விற்பனை நிலையம் பொதுமக்களின் உரிமைக்கு விடப்பட்டுள்ளது. இந்த நவீன மீன் விற்பனை நிலையத்தின் ஊடாக வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தரமான போசாக்குடைய மீன் வகைகளுக்கு மேலதிகமாக மாசி அடங்கலாக ஏனைய மீன் உற்பத்திப் பொருட்களை இலகுவாக கொள்முதல் செய்ய முடியும்.
இந்நிகழ்வில் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு சுதர்சன் தெனபிட்டிய, கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திரு எம்.பீ.என் விக்ரமசிங்க, கடற்றொழில் அமைச்சின் மேலதிக செயலாளர் (மனித வள அபிவிருத்தி) திருமதி அனுஸா கோகுல பர்னாந்து, இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் திரு சுரங்க ஹிதல்லஆராச்சி ஆகியோர்கள் அடங்கலாக இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் சிலரும் கலந்து கொண்டிருந்தனர்.