WhatsApp Image 2024 07 29 at 13.09.21 1503a122

அண்மைக் காலத்தில் கௌரவ பிரதமர் திரு திணேஸ் குணவர்தண அவர்கள் மற்றும்  கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் சீன விஜயத்தின்போது மேற்கொள்ளப்பட்ட இராஜதந்திர கலந்துரையாடலின் பிரகாரம் சீன அரசாங்கத்திடமிருந்து உதவியாகப் பெறப்பட்ட சுமார் 75,000 வலைத் தொகுதிகள் வடக்கு கிழக்கு மீனவ குடும்பங்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதற்கமைய இந்த வலைகள் கடற்றொழில் திணைக்களம் இந்த மாவட்டங்களின் உதவிப் பணிப்பாளர்களின் அலுவலகங்களுக்கு வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், யாழ்ப்பாண மாவட்டத்துக்கு 26,700 வலைத் தொகுதிகளும், திருகோணமலை மாவட்டத்துக்கு 15,100உம், மன்னார் மாவட்டத்துக்கு 7,800 உம், மட்டக்களப்பு மாவட்டத்துக்கு 9,850உம், முல்லைத்தீவு மாவட்டத்துக்கு 4,650உம், கல்முனை மாவட்டத்துக்கு 5,600உம்,  கிளிநொச்சி மாவட்டத்துக்கு 5,300 என்ற ரீதியில் இந்த வலைத் தொகுதிகளைப் பகிர்ந்தளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வலைத் தொகுதிகள் இந்நாட்டுக்கு கிடைத்துள்ளதுடன், அவற்றை வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் வடக்கு, கிழக்கு மீனவ குடும்பங்களை ஊக்குவிப்பதற்காக சீன அரசிடமிருந்து கிடைத்த அரிசி 50 கி.கி. வீதம் 16,200 அரிசிப் பொதிகள் ஒரு குடும்பத்துக்கு 20 கி.கி. வீதமாக யாழப்பாண மாவட்டத்துக்கு 1,335 அரிசிப் பொதியும், கிளிநொச்சி மாவட்டத்துக்கு 265 பொதியும், மன்னார் மாவட்டத்துக்கு 390 பொதியும், முல்லைத்தீவு மாவட்டத்துக்கு 233 பொதியும், மட்டக்களப்பு மாவட்டத்துக்கு 492 பொதிகள் என்ற ரீதியில் வடக்கு கிழக்கு மாகாணங்களின் மீனவ குடும்பங்களுக்கு எதிர்வரும் காலங்களில் பகிர்ந்தளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மீனவ அமைப்பின் ஊடாக இந்த அரிசியை மீனவ அமைப்பின் ஊடாக பகிர்ந்தளிப்பதற்கு ஏற்பாடு செய்யுமாறு கடற்றொழில் உதவிப் பணிப்பாளர்களுக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பணிப்புரை வழங்கியுள்ளார்.

அமைச்சரினால் அழைப்பு விடுக்கப்பட்ட கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திரு நிஸாந்த விக்ரமசிங்க, கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு சுசந்த கஹவத்த உட்பட வடக்கு கிழக்கு மாகாணங்களின் சகல பணிப்பாளர்களும் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

சமீபத்திய செய்திகள்

Youtube