mini

வட மகாணத்தில் கடலட்டை வளர்ப்பதற்கு மீனவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் பலர் தற்போது ஈடுபட்டு வருவதுடன், நிலவும் குறைபாடுகள் மற்றும் முன்னேற்றம் தொடர்பாக ஆராய்ந்து பார்ப்பதற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் 2024.08.01ஆந் திகதி விசேட கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் உள்ள அவரின் அலுவலகத்தில் நடைபெற்றது.

இங்கு நாட்டுக்கு அந்நியச் செலவாணியை ஈட்டித் தரும் வழியாக இப்பிரதேசத்தில் பலர் கடலட்டை வளர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக இங்கு செய்கையாளர்கள் அமைச்சரிடம் தெரிவித்தனர். மேலும் பல பிரதேசங்களிலும் இந்த நடவடிக்கையை ஊக்குவிக்குமாறு கேட்டுக் கொண்டதுடன், தற்போது யாழ்ப்பாணத்தில் கைட்ஸ் தீவில் கடலட்டை வளர்ப்பை ஆரம்பிப்பதற்கு பலர் எதிர்பார்த்துள்ளதுடன், இதற்குத் தேவையான வசதிகளை செய்து தருமாறு அவர்கள் அமைச்சரிடம் கேட்டுக் கொண்டனர்.

வடக்கு கிழக்கு மீனவர்கள் மேலதிக வருமானமாக பெறுவதற்கு கடலட்டை வளர்ப்பை மேற்கொள்ளும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், தற்போது பெருமளவில் செய்கையாளர்கள் கடலட்டை வளர்ப்பில் ஈடுபடுவதால் அவர்களின் வருமானமும் அதிகிரித்துள்ளதாக அமைச்சர் இங்கு தெரிவித்தார். எனவே கைட்ஸ் போன்ற பிரதேசங்களில் மட்டுமன்றி; வட மாகாணத்தில் கடலட்டை வளர்ப்பவர்களுக்கு உடனடியாக தேவையான வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

சமீபத்திய செய்திகள்

Youtube