miniதேசிய மீனவ சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு 2024.08.09ஆந் திகதி நடைபெற்ற தேசிய மீனவ மாநாட்டில் அதிமேதகு ஜனாதிபதி அவர்களிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைகளில் முக்கியமானது மீனவர்களுக்குத் தேவையான எரிபொருளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பதாகும்.

தேசிய மீனவ மகா சம்மேளனத்தின் இந்த கோரிக்கையை நிறைவேற்ற இன்று (2024.08.21) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மீனவ மக்களை உற்சாகப்படுத்தி மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் வகையில் எரிபொருள் நிவாரணமாக டீசலின் விலையை ரூபா 25ஆலும், மண்ணெண்ணெய் விலையில் ரூபா 25ஆலும் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த அவர்களினால் எரிபொருள் நிவாரணம் வழங்குவது தொடர்பாக அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை மசோதாவுக்கு அமைய இந்த எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது. மேலும் எதிர்காலத்தில் மேலும் மீனவ மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கமைய உர மானியத்தின் காரணமாக விவசாய அறுவடை அதிகரித்துள்ள நிலையில், எரிபொருள் விலை குறைப்பதன் மூலம் அறுவடையை அதிகரிப்பதன் மூலம் மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்த முடியுமென கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த அவர்கள் தெரிவித்தார்.

இதற்கமைய உடனடியாக நிறைவேற்றும் வகையில் மீனவ மக்களுக்கு இந்த எரிபொருள் நிவாரணம் வழங்குவதற்கு அவசியமான நடைமுறைகள் அமுல்படுத்துமாறு சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு அமைச்சரவை செயலாளர் ஆலோசனை வழங்கினார.

சமீபத்திய செய்திகள்

Youtube