mini 2352243

மீனவ மகா சம்மேளனத்தின் மூலம் 2024 ஓகஸ்து மாதம் 09ஆந் திகதி கொழும்பு கண்காட்சி மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தின்போது தேசிய மீனவர் மகா சம்மேளனத்தின் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ள மீன்பிடித் தொழிலுக்குள்ள தாக்கத்தை குறைக்கும் வகையில் மீனவர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளில் முக்கிய விடயமான மீன்பிடித் தொழிலுக்கு எரிபொருள் மானியம் வழங்க வேண்டும் தெரிவிக்கப்பட்டது.

 

இந்த கோரிக்கைக்கு அமைவாக கடந்த 21ஆந் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த அவர்களால் சமர்ப்பித்த அமைச்சரவை மசோதாவுக்கு அமைய, மீனவ மக்களுக்கு அத்தியவசிய எரிபொருளுக்கு பன்னாட் படகுகள் மற்றும் ஒருநாட் படகுகளுக்கு ஒரு லிற்றர் டீசலுக்கு ரூபா 25.00உம் மண்ணெண்ணெய்க்கு ரூபா 25.00 உம் எரிபொருள் மானியமாக வழங்க கடந்த 23ஆந் திகதி முதல்  இதனை நடைமுறைப்படுத்தும் வகையில், அதற்குத் தேவையான சுற்றறிக்கை 2024.08.26ஆந் திகதி கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்;தினால் வெளியிடப்பட்டது.

DFAR/FUEL/2024/001ஆம் இலக்க சுற்றறிக்கைக்கு அமைய மீன்பிடித்தொழிலை சிறந்த நிலைக்கு மீட்டெடுப்பதற்கு மானியமாக மீனவர்களுக்கு நாளென்றுக்கு 15 லிற்றர் மண்ணெண்ணையும் மாதத்துக்கு 25 நாட்கள் உச்சளவின் கீழ் தொழிலில் ஈடுபடும் நாட்களுக்கு மட்டும் ஒரு லிற்றருக்கு 25 ரூபாவுக்கு வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இங்கு மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் IMUL மற்றும் IDAY  படகு உரிமையாளர்களினால் கொள்முதல் செய்யப்படும் மண்ணெண்ணைக்கு நாளொன்றுக்கு அதிகபட்சம் 15 லிற்றர் உச்ச அளவின் கீழ்  மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் நாட்களுக்கு மட்டும் 25 நாட்களுக்கு ரூபா 9,375 மீண்டுவரும் தொகையாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் ரீதியாக டீசல் பயன்படுத்தப்படும் மீன்பிடிப் படகின் உரிமையாளர்களுக்கு, அவர்கள் கொள்முதல் செய்யும் ஒரு லிற்றர் டீசலுக்கு ரூபா 25 பணம் கிடைப்பதற்கு இந்த மீனவர்களுக்கு மீன்பிடி தொழிலை சிறந்த நிலைக்கு கொண்டு வருவதற்கான கொடுப்பனவாக, சம்பந்தப்பட்ட படகின் வகை, செயற்பாட்டு  முறை, செயற்படும் பிரதேசம் மற்றும் செயற்படும் நாட்களின் எண்ணிக்கை என்ற அடிப்படையில் அரசு தீர்மானித்துள்ளது. இதற்கமைய எரிபொருள் ரீதியாக டீசல் பயன்படுத்தி கடற்றொழில், நீரியல் வளங்கள் திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட செயற்படும்  மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் IMUL மற்றும் IDAY  படகுகளுக்கு கொள்முதல் செய்யும் டீசல் லிற்றர் ஒன்றுக்கு ரூபா 25.00 வீதம்  மீண்டுவரும் பணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஒவ்வொரு படகுத் தொகுதிகளுக்கும் உரித்துடைய நன்மைகள் FR/24/01 மூலம் வழங்கும் தகவலின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.  எவ்வாறாயினும் ஒருமுறை பயணத்துக்கு நிரப்பப்பட்ட எரிபொருளின் அளவூ அந்த படகின் எரிபொருள் கொள்கலனின் கொள்ளளவைவிட அதிகமாக இருத்தல் கூடாது. IMUL மற்றும் IDAY  படகின் மூலம் மேற்கொள்ளப்படும் செயற்பாட்டு வகைக்கு ஏற்ப வழங்கப்படும் அதிகபட்ச எரிபொருள் நிரப்பு கொடுப்பனவு தொடர்பான இறுதித் தீர்மானம் கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திடமே உள்ளது.

இந்த வேலைத்திட்டம் 06 மாதங்களுக்கு மட்டும் செயற்படுத்தப்படும். இக்காலப் பகுதிக்குள்  பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினல் மண்ணெண்ணெய் மற்றும் டீசல் விலை  திருத்தப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இந்த திருத்தம் செயற்படுத்தப்படும் தேதியிலிருந்து இந்த திட்டத்தின் கீழ் உள்ள நன்மையும் திருத்தத்துக்குள்ளாகும். இதற்கமைய ஒவ்வொரு முறையும் டீசலுக்கு 7.5மூ சதவீதமும் மண்ணெண்ணைக்கு 12.5மூ சதவீதமும் கவனம் செலுத்தி லிற்றர் ஒன்றுக்கான வழங்கப்படும் நன்மையும் கணக்கிடப்படும். மேற்குறித்த விடயத்துக்கான இந்த எரிபொருள் மானியம் ஓகஸ்து மாதம் 23ஆந் தேதி முதல் கணக்கிட்டு மீன்பிடி படகு உரிமையாளர்களுக்கு வழங்குமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த அவர்கள் கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அடங்கலாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு 2024.08.26ஆந் திகதி ஆலோசனை மற்றும் பணிப்புரை வழங்கினார்.    

சமீபத்திய செய்திகள்

Youtube