regulation

கடற்றொழில் அமைச்சரினால் விரைவில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பதற்கு உத்தேசித்துள்ள புதிய கடற்றொழில் சட்டத்தின் மூலம் தேசிய மீனவ சம்மேளனத்தின் பொறுப்புகள் அதிகரிப்பதுடன், சம்மேளனம் மற்றும் கிராமிய மீனவ சங்கங்களின் பொறுப்புகள் கடற்றொழில் அமைச்சுக்கு வருமென தேசிய மகா சம்மேளனத்தின் பிரதான செயலாளர் திரு நெல்சன் எதிரிசிங்க அவர்கள் தெரிவித்ததார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் 2023.09.27ஆந் திகதி தேசிய மீனவ சம்மேளனத்தின் மாத்தறை மாவட்ட சங்கத்தின் பொதுத் தேர்தல் மாத்தறை தெவிநுவர புரணவெல்ல மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்ற சமயத்தில் கலந்து கொண்டு அங்கு கருத்து தெரிவித்த அவர் 1996ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க கடற்றொழில் சட்டத்தின் மூலம் அமுல்படுத்தப்பட்டிருந்த மீனவ மகா சம்மேளனம் முன்னாள் கடற்றொழில் அமைச்சர் திரு ராஜித சேனாரத்ன அவர்களின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டாலும், அதன் விதிமுறைகள் விதிக்கப்பட்டதிலிருந்து இதுவரை எந்த கடற்றொழில் அமைச்சரினாலும் செய்யப்படவில்லை என்றாலும், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கருத்துக்கு அமைய அதற்குப் பதிலான புதிய ஒழுங்குவிதிகள்; தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன். அது அமைச்சரின் கையொப்பத்துடன் சட்டவரைஞர் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு அனுமதி கிடைத்தவுடன் அமைச்சரவைக்கு சமர்ப்பித்து அனுமதி பெறுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் இந்நாட்டின் மீனவ மக்கள் ஏனைய தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களை விடவும் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பதுடன், வேறு எந்த விவசாயிகள் அல்லது தோட்ட தொழிலாளர்கள் அல்லது அரச மற்றும் கூட்டுத்தாபன மட்டத்தில் எந்த தொழிற் சங்கமும் தனது தொடர்பான அமைச்சின் மூலம் செயற்படும் தொழிற் சங்கமல்ல. அத்துடன் தேசிய மீனவ சம்மேளனத்தின் மூலம் அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாக தெரிவித்தார். மேலும்  இந்த சம்மேளனத்தின் மூலம் மீனவ பெண்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் வேலைத் திட்டம் ஒன்றை செயற்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும், மீனவர்களுக்கு கடலில் பேரிடர் ஏற்படும் சமயத்தில்  அவர்களுக்கு உதவுவதற்கு தேசிய மீனவ இடர் நிதியம் ஒன்றை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இங்கு 2024ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாக சபை தெரிவு செய்யப்பட் டுள்ளதுடன்இ சங்கத்தின் எதிர்கால செயற்பாடுகளுக்கு புதிய நிர்வாக சபை தலைமை தாங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் சம்மேளனத்தின் நிர்வாக செயலாளர் திரு திசாநாயக்கா மற்றும் மாத்தறை மாவட்ட உதவி பணிப்பாளர் திரு மதுஷங்க ஆகியோர் உள்ளிட்ட குழுவினர் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Youtube