WhatsApp Image 2024 01 17 at 3.25.22 PM

கடல் உணவு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் நிறுவனம் ஒன்றான CM Blue Crabs தனியார் நிறுவனம் நண்டு பதப்படுத்தும் தொழிற்சாலை ஒன்று 2024.01.16ஆந் திகதி மன்னார் பிரதேசத்தில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

உள்ளுர் மீனவர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நண்டுகளை தயாரித்து பதப்படுத்தும் நடவடிக்கை அவர்களின் பிரதான தொழிற்சாலைக்கு அனுப்பி இந்த தொழிற்சாலையின் ஊடாக மேற்கொள்ளப்படுகிறது.

இந்த நிறுவனத்தினால் மன்னார் மாவட்டத்தின் பேசாலை பிரதேசத்தில் ரின்மீன் தொழிற்சாலை, ஐஸ் தொழிற்சாலை ஒன்று மற்றும் மீன் உணவு தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இலங்கையில் முதலாவது மீன் எண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டு மிக வெற்றிகரமாக நடாத்தப்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தில் 800 முதல் 1000 பேர் வரையிலானவர்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்க முடியும். நாடு முழுவதும் 22 கிளைகளை நடாத்தும் இந்த நிறுவனம், மன்னார் மாவட்டத்தில் பெண் தலைமைத்துவ 200 குடும்பங்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

கடந்த 5 ஆண்டுகளாக கடல் உணவு உற்பத்தியில் ஈடுபட்டுவரும் CM Blue Crabs தனியார் நிறுவனம், கடல் உணவு தயாரித்து அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் ஊடாக பெருமளவிலான அந்நிய செலாவணியை ஈட்டுவது சிறப்பு அம்சமாகும்.

இங்கு கருத்து தெரிவித்த ;கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், இவ்வாறான நிறுவனம் இலங்கைக்கு அத்தியாவசிய நிறுவனமாகும், இலங்கைக்கு டொலர்ளைக் கொண்டு வருவதற்கு இவ்வாறான நிறுவனங்கள் பல புதிதாக ஆரம்பிக்க வேண்டுமெனவும் தெரிவித்தார். 

WhatsApp Image 2024 01 17 at 3.25.24 PM

WhatsApp Image 2024 01 17 at 3.25.25 PM

Youtube