மீனவ மக்களுக்கு வலுவூட்டுவதற்கு அதிகாரம் அளிக்கும் வகையில், கடற்றொழில் அமைச்சு, சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சும் இணைந்து செயற்றிட்டம் தயாரிப்பதற்கான ஆரம்ப கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சின் இராஜாங்க அமைச்சர் அனுப்ப பெஸ்குவெல் ஆகியோர்களுக்கிடையில் 2024.03.12ஆந் திகதி கடற்றொழில் அமைச்சில் நடைபெற்றது.
வட மாகாணத்தின் அபிவிருத்திக்கு மற்றும் பாதுகாப்புக்காக இந்தியா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகள் வடக்கு அபிவிருத்திக்காக ரூபா 4900 மில்லியனுக்கும் கூடுதலான நிதி உதவி வழங்குவதற்கு முன்வந்துள்ளதாகவும், இந்த உதவி எமது நாட்டின் அபிவிருத்திக்காக சரியான முறையில் பயன்படுத்த வேண்டுமென கடந்த தினம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த அவர்கள் ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.
இலங்கை கடற் பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு இந்திய மீனவர்களுக்கு அனுமதி வழங்குமாறு தமிழ்நாடு அரசு இலங்கை அரசிடம் கோரியிருந்தாலும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் அதனை நிராகரித்துள்ளார்.
மீன் ஏற்றுமதியாளர்கள் தங்களது உற்பத்திகளுக்கு நியாயமான நிர்ணய விலையொன்றை வகுத்து அதனை செயற்படுத்த வேண்டுமெனவும் அத்துடன் இதற்காக தேசிய கொள்கைத திட்டமொன்று வகுக்கப்பட வேண்டுமெனவும் பலநாள் மீன்பிடிப் படகு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நீலப் பொருளாதார கொள்கைக்கு அமைவாக நிலைபேறாக உறுதிப்படுத்தி இலங்கையில் மீன்பிடிக் கைத்தொழில் தேசிய பொருளாதாரத்துக்கு பிரதான பங்களிக்கும் இடமாக மாற்றுவதற்கான இலக்குடன் பரிந்துரையை வழங்குவதற்கு பொறியியலாளர் மங்கள திரு பீ.பி. யாப்பா அவர்களின் தலைமையில்; நிபுணத்துவ குழுவொன்றை மேன்மைதங்கிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களினால் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் தலைவராக பொறியியலாளர் மங்கள திரு பீ.பி. யாப்பா அவர்கள் நியமிககப்பட்டுள்ளதுடன், இவர் முதலீட்டு சபையின் முன்னாள் தலைவராவார்.
.
சமீபத்திய செய்திகள்
- இலங்கையில் தயாரிக்கப்பட்ட டின் மீன்கள் முதல் முறையாக வெளிநாட்டு ஏற்றுமதிக்கு
- இலங்கையின் மிகப்பெரிய மீன்பிடி படகு டிக்கோவிட்டவில் அறிமுகப்படுத்தப்பட்டது
- கொக்கல வாவியில் 60,000 மீன் குஞ்சுகள் விடுவிப்பு
- கடற்றொழில் அமைச்சு மற்றும் மாகாண மீன்வள அமைச்சுகளுடன் இணைந்து மீன்பிடித் தொழிலை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டம்
- *மீன்பிடித்துறைக்கு முன்னெப்போதும் இல்லாத ஒதுக்கீடு: 2025 வரவு செலவுத் திட்டத்தில் ரூ. 11.4 பில்லியன், கடந்த ஆண்டுடைவிட 62.85% வளர்ச்சி*