mini

கடந்த 2024.06.28ஆந் திகதி தெற்கில் உள்ள கடற்றொழில் துறைமுகங்களில் நிலவும் நிலையைக் கண்காணிப்பதற்கான சுற்றுப் பயணத்தில் ஈடுபட்ட கடற்றொழில் அமைச்சர், அதற்கமைய கிரிந்தையில் இருந்து பாணந்துறை வரையான கடற்றொழில் துறைமுகங்களில் நிலவும் தற்போதுள்ள குறைபாடுகளை உடனடியாகப் புனரமைப்பதற்கு ரூபா 1000 மில்லியன் அரசிடமிருந்து பெற்றுக் கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இதற்கு அவசியமான அமைச்சரவை பத்திரம் ஒன்றைத் தயாரித்து உடனடியாக அமைச்சரவைக்குச் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திரு நிஸாந்த விக்ரமசிங்க அவர்களிடம் அமைச்சர் 2024.07.01ஆந் திகதி ஆலோசனை வழங்கினார்.

கடந்த சுற்றுப் பயணத்தின்போதும், முன்னைய சுற்றுப் பயணத்தின்போதும் இந்த இத்துறைமுகங்களில் நிலவும் குறைபாடுகள் தொடர்பாக துறைமுக அபிவிருத்திக் குழு மற்றும் பிரதேசத்தின் மீனவ சங்கங்களினால் அமைச்சருக்கு தெரியப்படுத்தியதுடன் இது சம்பந்தமாக கடந்த சுற்றுப் பயணத்தின்போதும் மற்றும் இந்த சுற்றுப் பயணத்தின்போதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து அவற்றின் அக்குறைபாடுகள் பற்றிய தகவல்கள் சேகரித்து அமைச்சர் இக்குறைபாடுகளை தீர்ப்பதற்கு தேவையான ஒதுக்கீடுகளைப் பெற்று முடிந்தளவு விரைவாக முடிக்குமாறு கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின தலைவர் திரு நிலங்க ஜயவர்தண அவர்களுக்குப் பணிப்புரை வழங்கினார்.  

இத்துறைமுகங்களில் காணப்படும் குறைபாடுகள் காரணமாக  மீனவர்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாவதாகவும், அமைச்சர் அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு தெரியப்படுத்திய பின்னர் அவரின் அறிவூறுத்தலுக்கு அமைய இந்த அமைச்சரவைப் பத்திரம் தயாரிக்கப்படுமென கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த அவர்கள் மேலும் தெரிவித்தார். 

சமீபத்திய செய்திகள்

Youtube