en banner

WhatsApp Image 2025 06 25 at 08.16.10

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில், பிரதி அமைச்சர் ரத்ன கமகேவின் பங்கேற்புடன் கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் 24.06.2025 அன்று கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவ சமூகத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.

இதன்போது, அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட "வளமான நாடு அழகான வாழ்க்கை" என்ற கொள்கை பிரகடனத்திற்கமைய  'நிலையான மேலாண்மை - தரமான மீன் வளம்' என்ற கொள்கை கட்டமைப்பு ஊடாக முறையான அறிவியல் முறைகள் மற்றும் நடைமுறை உத்திகள் மூலம் மீன்பிடித் தொழிலை நிலையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் மேம்படுத்துதல் மற்றும் நிர்வகித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் ஊடாக அதிக மீன்களை உற்பத்தி செய்து நுகர்வோருக்கு நியாயமான விலையில் வழங்குதல் மற்றும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல் தொடர்பிலான கலந்துரையாடலாக அமைந்திருந்தது.

இக் கலந்துரையாடலில் அமைச்சின் மேலதிக செயலாளர், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், கடலோரப் பாதுகாப்புத் திணைக்களம், பொலிஸார், சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் பல முக்கிய கடற்றொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள், அத்துடன் கடற்றொழில் அமைச்சின் கீழ் உள்ள இலங்கை கடற்றொழில் துறைமுகக் கூட்டுத்தாபனம், இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம், நாரா (NARA) நிறுவனம் மற்றும் நாக்டா (NAQDA) நிறுவனம் ஆகியவற்றின் அதிகாரிகள் மற்றும் தலைவர்களும், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

வடமாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில் மீன் பிடித்துறைக்கு முன்னுரிமை அளிக்கின்ற மாவட்டம் மன்னார் மாவட்டம் ஆகும். நூற்றுக்கு நாற்பது வீதம் மீன் பிடி தொழிலையே பிரதானமாகக்கொண்டுள்ளனர் என கடற்றொழில் மற்றும் நீரியல், கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த காலத்தில் கடற்றொழிலாளர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை. கடற்றொழிலாளர்களை பகடைக்காய்களாக மாத்திரமே பயன்படுத்தினர். நிரந்தர ஓய்வூதியம் கூட பெற்றுக்கொடுக்கப்படவில்லை. சட்டவிரோத கடற்தொழிலை தடுத்தலோடு அதில் ஈடுபடும் மீனவர்களை தெளிவூட்ட வேண்டும்.

இந்திய மீனவர்களின் வருகையையும் இதன் ஊடாக தெளிவுபடுத்த வேண்டியுள்ளது. எதிர்காலத்தில் இந்திய மீனவர்களின் வருகையை முற்று முழுமையாக நிறுத்த முடியும் என நம்புகின்றோம். இதற்கு இராஜதந்திர மட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. - என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மேலும் குறிப்பிட்டார்.

இதன்போது கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் ரத்ன கமகே, எதிர்வரும் ஜீலை மாதத்திலிருந்து மீனவர்களின் பங்களிப்புக்கு ஏற்ப ஓய்வூதியத்தையும் அதிகரிக்கவுள்ளோம். மீனவ பெண்களின் வாழ்வாதாரத்தையும் அதிகரிக்க பெண்கள் அமைப்புக்களை ஊக்குவிக்கவுள்ளோம் .கூட்டுறவு சங்கங்களையும் பலப்படுத்தவுள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.


WhatsApp Image 2025 06 25 at 08.16.06

WhatsApp Image 2025 06 25 at 08.16.14

WhatsApp Image 2025 06 25 at 08.16.16

WhatsApp Image 2025 06 25 at 08.16.04 1

WhatsApp Image 2025 06 25 at 08.16.13

சமீபத்திய செய்திகள்

Youtube