en banner

WhatsApp Image 2025 09 04 at 15.59.49நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் புனிதப் பிறப்பைக் கொண்டாடும் இந்த கௌரவமான தருணத்தில், இலங்கை வாழ் இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனைகளான அமைதி, சகோதரத்துவம் மற்றும் பிறர் மீது கருணை காட்டுதல் போன்ற உன்னத பண்புகள், பன்மைத்துவ சமூகம் கொண்ட நமது நாட்டின் ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் அத்தியாவசியமான அடித்தளங்களாகும்.

இந்த உன்னத போதனைகளில், இயற்கை மற்றும் அதன் வளங்கள், மனிதனுக்கு இறைவன் வழங்கிய ஓர் புனிதமான அமானிதம் என்ற ஆழமான தத்துவத்திற்கு ஒரு சிறப்பான இடம் உண்டு. அந்த இயற்கை அருட்கொடையைப் பாதுகாத்து, எதிர்கால சந்ததியினருக்காகக் கையளிப்பது நம் அனைவரதும் உன்னத கடமையாகும்.

கடற்றொழில் பிரதி அமைச்சர் என்ற வகையில், இந்த உன்னத போதனை நமது துறைக்கு வழங்கும் வழிகாட்டல் மிகவும் மகத்தானதாகும். நமது கடல் வளம், எமக்குக் கிடைத்த அத்தகையதொரு விலைமதிப்பற்ற பாரம்பரியமாகும். அதனை நிலைபேறான முறையில் நிர்வகிப்பது, எமது வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதுடன், இயற்கைக்காக நாம் ஆற்ற வேண்டிய கடமையுமாகும்.

இந்த புனித நாளில், எமது கடற்றொழிலாளர் சமூகத்தின் கடின உழைப்பை மரியாதையுடன் நினைவுகூரும் அதேவேளை, எம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள இந்த சுற்றுச்சூழல் பொறுப்பை நிறைவேற்ற நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என நான் கேட்டுக்கொள்கிறேன்.

அனைவருக்கும் அமைதியும் செழிப்பும் நிறைந்த மீலாத் உன்-நபி நல்வாழ்த்துக்கள்! 

சமீபத்திய செய்திகள்

Youtube