en banner

WhatsApp Image 2023 03 14 at 13.33.17

அண்மைக் காலமாக பன் மடங்கு அதிகரித்துள்ள மீன்பிடி சாதனங்களின் விலை அடுத்த சில மாதங்களில் ஓரளவு குறையுமென கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த த சில்வா அவர்கள் தெரிவித்தார்.

வாடிக்கையாளர்களுக்கு உயர் சேவையினை வழங்கும் நோக்கில் இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம் நாடளாவிய ரீதியில் “மெகா ஸ்டோர்” (ஆநபய ளுவழசந) எனும் நவீன விற்பனை நிலைய தொடரின் புதிய கிளை 2023 மார்ச் மாதம் 13ஆந் திகதி மாத்தறையில் திறந்து வைத்தபோது  கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

“மீன்பிடி சாதனங்களின் விலை உயர்வினால் மீனவர்கள் பாதிக்கப்படுவதை நாங்கள் அறிவோம். மீன்பிடி சாதனங்களின் விலையை இறக்குமதி செய்யும் நிறுவனங்களே தீர்மானிக்கின்றன. எவ்வாறாயினும், தற்போது ரூபாவின் மதிப்பு வலுவடைந்து வருவதால், மீன்பிடி சாதனங்கள் இறக்குமதியில் கிடைக்கும் இலாபம் நேரடியாக மீனவ சமூகத்திற்கே சேர வேண்டும். கடற்றொழில் அமைச்சு என்ற ரீதியில் நாம் இதில் தலையிட்டு வருகின்றௌம் எதிர்காலத்தில் மீன்பிடி சாதனங்களின் விலை குறைவடையும்”

இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தினால் ஸ்தாபிக்கப்பட்ட “மெகா ஸ்டோர்” (Mega Store)  எனும் நவீன விற்பனை நிலைய வலையமைப்பு தொடர்பிலும் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த த சில்வா அவர்கள் கருத்து தெரிவித்தார்.

மாத்தறையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள மெகா ஸ்டோர்ஸ் மூலமாக நுகர்வுக்கு ஏற்ற தரமான சத்துள்ள மீன் வகைகளுக்கு மேலதிகமாக கருவாடு, மாசி அடங்கலான மீன் உற்பத்திப் பொருட்களை கொள்முதல் செய்வதற்கு கடற்றொழில் கூட்டுத்தாபனம் வியாபாரிகளுக்கு வாய்ப்பினை உருவாக்கியுள்ளது.

நாட்டின் ஊட்டச் சத்து தேவையைப் பூர்த்தி செய்து, நெருக்கடியான போது மக்களுக்கு சாதாரண விலையில் மீன் பொருட்களை வழங்குவதே இந்த சங்கிலித் தொடர் கடைகளை ஆரம்பிப்பதன் நோக்கமாகும். எதிர்காலத்தில் நாடு முழுவதிலுமுள்ள முக்கிய நகரங்களில் இது போன்ற பல கடைகள் ஆரம்பிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்போது கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மாத்தறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் திரு நிபுணர நவக்க, முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் தென் மாகாண போக்குவரத்து அதிகார சபையின் தலைவருமான திரு அனுர குணரத்ண, மாத்தறை பிரதேச சபைத் தலைவர் கௌரவ விமல் பியரத்ன ஆகியோர்கள் அடங்கலாக பிரதேசத்தின் அரசியல் அதிகாரசபை இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் தலைவர் திரு சத்துரங்க உடவத்த மற்றும் அலுவலர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

WhatsApp Image 2023 03 14 at 13.33.16

சமீபத்திய செய்திகள்

Youtube