இலங்கைக்கு அந்நியச் செலாவணியைத் தேடித் தரும் வழியான அலங்கார மீன் தொழில் மற்றும் நீரியல் தாவர தொழில்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு இத்தொழிலில் ஈடுபடும் விவசாயிகளை அதிகரிக்கச் செய்வதற்கு கடற்றொழில் அமைச்சு மற்றும் நீர்வாழ் உயிரினச் செய்கை அபிவிருத்தி,
அதிகாரசபையூம் இணைந்து திட்டம் தயாரித்து வருவதாகவூம்இ தொழிலாளர்களுக்குத் தேவையான தொழில்நுட்பம் மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக ஆராய்ந்து பார்ப்பதற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் 2023.04.30ஆந் திகதி களணி மிட்டடியாவத்த பிரதேசத்தில் ஹோமாகம மற்றும் பாதுக்க ஆகிய பிரதேசங்களுக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். இந்த விஜயத்தின்போது பாராளுமன்ற உறுப்பினர் யதாமிணி குணவர்தன அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.
தற்போது மீன் உணவூகளின் விலை அதிகரித்துள்ளதோடுஇ குளங்களுக்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்களின் விலையூம் அதிகரித்துள்ளதால் அந்த தொழிலில் ஈடுபடுபவர்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியூள்ளதாக இங்கு அலங்கார மீன் மற்றும் நீரியல் தாவரங்கள் தொடர்பான தொழிலில் ஈடுபடுபவர்கள் அமைச்சருக்கு சுட்டிக்காட்டினர். எனவே இதில் அரசு தலையிட்டு ஓரளவூ நிவாரணம் வழங்கினால் நாட்டுக்குள் வரும் அந்நியச் செலாவணியூம் அதிகரிப்பதோடு இப்பிரதேசத்தில் வாழும் பலரது தொழில் பிரச்சனைக்கும் தீர்வூ வழங்க முடியூமெனவூம் மேலும் தெரிவித்தனர்.
இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர்இ அரசாங்கத்தின் பிரதமர் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேசம் என்ற வகையில் இப்பிரதேச மக்களிடையே நிலவூம் பிரச்சனைகளை அவர் நன்கு அறிவார் எனவூம்இ பிரதமரின் ஆலோசனைக்கமைய இந்த செய்கை பண்ணைகளை கண்காணிப்பதற்கு தான் நடவடிக்கை எடுப்பதாகவூம் நாட்டின் அந்நியச் செலாவணி பெருமளவில் கொண்டு வருவதற்குத் தேவையான வசதிகளை வழங்குவதற்கு அமைச்சு அதுபோன்று நீர்வாழ் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபை இணைந்து நடவடிக்கை எடுக்குமெனவூம் கூறினார். மேலும் மீன் உணவூ குளங்களுக்குப் பயன்படுத்தப்படும் கருவிகளின் விலையையூம் குறைப்பதற்கு பிரதமருடன் கலந்துரையாடி தகுந்த நடவடிக்கை எடுப்பதாகவூம் அமைச்சர் தெரிவித்தார்.
இச்சந்தர்ப்பத்தில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து ரத்னாயக்க நீர்வாழ் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர்இ பணிப்பாளர் நாயகம்இ பிரதமர் இணைப்புச் செயலாளர் ஆகியோர்கள் அடங்கலாக பலரும் கலந்து கொண்டிருந்தனர்.