en banner

WhatsApp Image 2023 05 08 at 15.45.50

பிரதமர் இங்கு கூறியபோது, இன்று (2023.08.08) கொழும்பு அறக்கட்டளை நிறுவனத்தில் நடைபெற்ற வரையறுக்கப்பட்ட சீ – நோர் நிறுவனத்தின் ஐம்பத்தைந்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு சமர்ப்பிக்கப்பட்ட ஐந்தாண்டு திட்டம் இணையதளத்தில் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டபோது இவ்வாறு கூறினார்.

உயர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, குறைந்த செலவில் அதிக மீன் உற்பத்திக்கான படகுகளை உற்பத்தி செய்வதன் மூலம் கடற்றொழில் அமைச்சின் வேலைத் திட்டங்களுக்கு பங்களிப்பு வழங்கும் சீ – நோர் நிறுவனம் நோர்வே நாட்டின் அனுசரணையுடன் 1967இல் ஆரம்பிக்கப்பட்டது. 

இங்கு கருத்து தெரிவித்த பிரதமர்,

“எமது நாடு புதிய மாற்றத்துக்கு உட்பட்டு எதிர்காலத்துக்கு ஏற்ற புதிய வேலைத் திட்டத்துக்கு கடற்றொழில் துறையில் நுழையும் இத்தருணத்துக்கு ஐம்பத்தைந்தாவது ஆண்டுக்குள் நுழைந்த தருணமாகக் கருதலாம்.  அரசாக இருப்பினும் தனியார் தரப்பினராக இருப்பினும் அதற்கு ஒரு திட்டமும் இலக்கும் இருத்தல் வேண்டும்.. இவ்வாறான திட்டமும் இலக்கும் இல்லாமல் ஒரு அமைப்பும் முன்னேற முடியாது. இச்சந்தர்ப்பத்தில் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிறுவனங்களையும் நாட்டையும் பாதிக்கிறது. எனவே சீ – நோர் நிறுவனம் அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திட்டத்தை முன்வைப்பது மிகவும் முக்கியமான விடயமாகும். இந்து சமுத்திரத்தில் மிக முக்கியமான கடல் பாதையில் இலங்கை அமைந்துள்ளது. இக்கடற் பரப்பில் முன்னும் பின்னும் செல்லும் கப்பல்களைப் பற்றி மட்டுமல்ல. பெறுமதியான மீன்களை அறுவடை செய்வது மற்றும் அதற்குத் தகுதியானவர்களுக்கு வசதிகள் தொடர்பிலும் முன்னோக்கிய திட்டம் தேவை. இத் திட்டங்களே நம்நாட்டின் எதிர்காலமாகும்.

சுமார் இருநூறு ஆண்டுகளாக தேயிலை மற்றும் இறப்பர் போன்றவற்றை நாம் ஏற்றுமதி செய்து வருகிறோம். அவ்வாறு எதிர்காலத்தில் மீன் ஏற்றுமதியையும் அதிகரிக்க முடியும். சீ – நோர் நிறுவனம் உருவாக்கப்பட்ட பின்னர் நவீன தொழில்நுட்பம் கடற்றொழில் துறையூடன் கலக்கப்பட்டுள்ளது. இக்கண்ணாடி இழையிலான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நமது மீன்பிடித் தொழிலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும். சுற்றுலாத் துறைக்குள் நுழையக்கூடியவாறு பல்வேறு நவீன படகுகளை உற்பத்திக்கு பல்வேறு தனித்துவமான பல நடவடிக்கைகளும் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

இலங்கை கடலில் பிடிக்கப்படும் மீன்கள் மிகவூம் சுவையாக இருப்பதாகக் கூறும் ஐரோப்பா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளின் கோரிக்கைக்கு மீன்களின் தேவையை இன்று பூர்த்தி செய்ய முடியவில்லை. அந்த கோரிக்கையை நிறைவேற்றுவதற்கான அடிப்படை அடித்தளம் புதிய செயற்றிட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படும். மீன்களைப் பாதுகாப்பாக சேமிப்பதில் சிக்கல் உள்ளது. கண்ணாடி இழையிலான தொழில்நுட்பத்தை அதிக பயன்பாடுகளுக்கு மாற்றுவதன் மூலம் மீன்களைப் பாதுகாப்பதற்கான வழிகளைப் பற்றி சிந்திக்க வேண்டும். 

சர்வதேச சமூகத்துடன் இணக்கமாக செயற்படக்கூடிய துறைகளில் நுழைந்து சவாலை வெற்றி கொள்ள வேண்டும். கலந்துறையாடல் மூலம் பிரச்சனைக்குத் தீர்வூ காண வேண்டும். கடலில் பயணிக்கும் ஒவ்வொரு கடற்றொழில் படகுகளுக்கும் சமிக்ஞைத் தொகுதியை நிர்மானிப்பதற்குத் தேவையான இயந்திரங்களைப் பெற்றுக் கொள்ளும் வேலைத் திட்டத்தையும் நாம் முன்னெடுத்துள்ளோம். . 

“நமது சமுத்திரத்தைக் கடப்பதற்கு, புதிய தலைமுறைக்கு மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை வழங்குவதோடு, அவர்கள் வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்கும் அவர்களை வழிநடத்தல் வேண்டும். புதிய நடவடிக்கையாக சீ-நோர் நிறுவனத்தை தொழில்நுட்ப கல்லூரியாக மாற்ற அரசு முழுமையான ஆதரவை வழங்கும்”  

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்

“கடற்றொழில் கைத்தொழிலில் பாரிய முன்னேற்றத்துக்கு சீ – நோர் நிறுவனம் பங்ளிக்கின்றது. நமக்கு நன்னீர் வளத்தின் மூலம் மக்களின் போசனைக்கு மட்டுமன்றி நாட்டின் பொருளாதாரத்துக்கும் பெரும் பங்களிக்கின்றது.. இதற்கு நவீன தொழில்நுட்பம் கொண்ட படகுகள் பயன்படுத்த முடியும். இதற்கும் சீ – நோர் நிறுவனம் பங்களிப்பு வழங்குகின்றது. தூரக் கடலில் வாரக் கணக்கில் தங்கி படகுகள் மூலம் மீன் பிடிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. இந்த மீன்களின் அறுவடையின் தரம் மற்றும் பாதுகாப்புக்கும் குளிரூட்டல் வசதியுடனான படகுகள் அவசியமாகும். இதற்கு சீ – நோர் நிறுவனத்தின் ஆதரவை நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.”

கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஸாந்த அவர்கள்.

“இலங்கையின் பொருளாதாரம் மற்றும் அரசியல் நெருக்கடியுடன், இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுதல் வேண்டும். இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் ஆரம்ப புள்ளியாக இந்த ஆண்டு விழா நடாத்தப்படுகின்றது. பிரதமர் தினேஸ் குணவர்தன அவர்களின் தந்தை திரு பிலிப் குணவர்தன அவர்களின் காலத்தில் இந்த நிறுவனம் நிறுவப்பட்டது. அத்துடன் கடற்றொழில் கைத்தொழிலில் பொற்காலத்தை உருவாக்கியவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களேயாகும்.

இந்த நிறுவனத்தை சிறந்த வலுவான நிறுவனமாக முன்னோக்கி கொண்டு செல்வதே எங்கள் எதிர்பார்ப்பாகும். நாடு முழுவதிலுமுள்ள சமுத்திர வளங்களை நாம் பயன்படுத்திக் கொண்டோமா என்ற சந்தேகம் எமக்கு ஏற்படுகின்றது. இது வெறும் ஐந்தாண்டு செயற்பாட்டு திட்டமல்ல. இந்த துறையில் போட்டியை எதிர்கொள்ளும் வகையில் இந்த திட்டத்தை நாம் செயற்படுத்த வேண்டும். ஏனெனில்  நாம் சர்வதேசத்தை வெற்றி கொள்ள வேண்டும். அனுபவம் பெற வேண்டும். இந்த திட்டத்தை செயற்படுத்தி இலக்கை நிறைவு செய்வதன் முலம் நாம் அதனை மேற்கொள்ள முடியும். 

இருபத்தைந்து ஆண்டு சேவையை நிறைவு செய்த ஊழியர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

இச்சந்தர்ப்பத்தில் கலாநிதி அஸ்ஸஜி தேரர், அமைச்சரான மனுஸ நாணயக்கார, ரொசான் ரணசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தண, துhதுவர், கடற்றொழில் அமைச்சின் செயலாளர் இந்து ரத்னாயக்க, சீ – நோர் நிறுவனத்தின் தலைவர் துலான் ஹெட்டிஆராச்சி ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

WhatsApp Image 2023 05 08 at 18.33.16

WhatsApp Image 2023 05 08 at 18.34.22

WhatsApp Image 2023 05 08 at 16.35.50

WhatsApp Image 2023 05 08 at 15.45.51

சமீபத்திய செய்திகள்

Youtube