இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம் தற்போதைய சந்தைக்கு ஏற்ற வகையில் மறுசீரமைக்கப்பட்ட கடற்றொழில் கூட்டுத்தாபனம் மீன் உற்பத்தியை UBER, PICKME ஊடாக வீட்டுக்கு கொண்டு வந்து வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பதற்கான அவகாசம் உருவாகியுள்ளதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் திரு பியல் நிஷாந்த த சில்வா அவர்கள் தெரிவித்தார்.
2023 ஓகஸ்து மாதம் 23ஆந் திகதி நாரஹேன்பிட்டி கிரிமண்டல மாவத்தை பொருளாதார நிலையத்தின் வளாகத்தில் அமைந்துள்ள H18 எனும் பெயருடைய கடற்றொழில் கூட்டுத்தாபன விற்பனை நிலையத்தை நவீனமயப்படுத்தி மீள்; திறப்பு விழாவின்போது கலந்து கொண்ட கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். இதற்கமைய முதற் கட்டமாக கொழும்பு மற்றும் புறநகர் பிரதேசங்களில் மக்களுக்கு இந்த வசதி வழங்கப்பட்டுள்ளது.
“சிறிய இடத்தில் இயங்கி வந்த கடற்றொழில் கூட்டுத்தாபனம் தமது வாடிக்கையாளர்களுக்கு வசதியாக இவ்வாறு பனரமைக்கப்பட்டுள்ளது. இங்கே தற்போது பணமாகவூம் ஞசு முறையிலும் செலுத்த முடியும். UBER, PICKME போன்ற சேவையின் ஊடாக வாடிக்கையாளர்களுக்கு மீன் உற்பத்தியை வீட்டுக்கு கொண்டு வந்து கொடுப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கட்டிடங்கள் மட்டுமன்றி தற்போது கடற்றொழில் கூட்டுத்தாபனம் புதிய சிந்தனைகளுடனான புதுமைக்கு இது ஒரு நல்ல சான்றாகும்”.
கடற்றொழில் அமைச்சு மற்றும் கடற்றொழில் கூட்டுத்தாபனமும் பல்வேறு சவால்களை எதிர்நோக்கி வருகின்ற போதிலும், தொலைநோக்குப் பார்வையுடன் முன்னோக்கிச் செல்ல முயற்சிப்பதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் திரு பியல் நிஷாந்த த சில்வா அவர்கள் தெரிவித்தார்.
இலங்கையில் உள்ள அனைத்து அரச நிறுவனங்களையூம் நவீனமயப்படுத்த வேண்டும், புதிய உலகத்துக்கு ஏற்ற வகையில் செயற்பட வேண்டும். குறுகிய சிந்தனைகளைக் கொண்ட நாடாக நாம் முன்னேற முடியாது. நாம் அனைவரும் இனைந்து செயற்பட்டால் மட்டுமே இந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியும்.”
சவால்கள் எப்படி வந்தாலும் தரமான சத்தான மீன்களை சாதாரண விலையில் வழங்குதல் மற்றும் மீனவ மக்களின் மீன் அறுவடைக்கு நியாயமான மதிப்பை வழங்குவதே தமது நோக்கமெனவும் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இச்சந்தர்ப்பத்தில் கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் தலைவர் திரு டீ.வீ. உபுள், கடற்றொழில் அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி அனுஷா கோகுல ஆகியோர்கள் அடங்கலாக அரச அலுவலர்களும் கலந்து கொண்டிருந்தனர்.