தமது பொழுதுபோக்குக்காக அரசியல் செய்யவில்லை எனவூம்இ நாட்டின் தற்போதைய நிலையை உணர்ந்துஇ வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதார நிலையிலிருந்து மக்களை மீட்பதற்கு ஜனாதிபதி அவர்கள் அரசை வழி நடத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளையூம் மேற்கொண்டு வருவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்இ 2024.01.17ஆந் திகதி கிளிநொச்சியில் நன்னீர் மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளின் சந்திப்பின்போது இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில்இ கடந்த காலத்தில் மீன்பிடித் தொழில் உள்ளிட்ட நாட்டின் அனைத்து துறைகளும் பின்னடைவைச் சந்தித்தன. நன்னீர் மற்றும் உவர்நீர் மீன்பிடி நடவடிக்கையிவ் ஈடுபடும் மீனவர்களுக்கு வழங்கக்கூடிய நிவரணங்களும் உதவிகளும் கடந்த காலத்தில் வழங்கப்பட்டதாக தெரிவித்த அமைச்சர்இ எதிர் காலத்தில் மேலும் உதவிகள் வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாகவூம் தெரிவித்தார்.
தற்போது புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் காலத்தில் தோன்றும்இ நடுத்தர காலத்தில் தோன்றும் நீர்த் தேக்கங்களுக்கு மீன் குஞ்சுகளை விடுவிப்பதற்கு ஏற்பாடுகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வருவதுடன்இ தற்போது புதுப்பாலம் வாவிக்கு 130,000 மீன் குஞ்சுகள் விடப்பட்டுள்ளதாகவூம் தெரிவித்தார். காலத்தில் தோன்றும் நீர்த் தேக்கங்களில் தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு 06 மாதங்களுக்கு மீன்பிடித் தொழிலை இழக்க நேரிடுவதாகவூம்இ அக்காலங்களில் விவசாய நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தேவையான உதவி வழங்குவதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படுமெனவூம் அமைச்சர் தெரிவித்தார்.