தேசிய ரின் மீன் தொழிலை மேம்படுத்துவதற்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் அரசின் மூலமாக தருவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சிலாபம் மஹவெவ பிரதேசத்தில் அமைந்துள்ள PRF பூட் தனியார் கம்பனியை 2024.01.26ஆந் திகதி கண்காணிக்கச் சென்றபோது இவ்வாறு தெரிவித்தார்.
தற்போது வெளிநாட்டு ரின் மீன்களின் இறக்குமதி ஏற்கனவே கட்டுப்படுத்தியூள்ளதாகவும், எதிர்காலத்தில் உள்நாட்டு ரின் மீன் தொழிலை மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கை தற்போது எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்த அமைச்சர், உள்நாட்டு ரின் மீன்களின் தரத்தை மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது.
ரின் மீன் ஏற்றுமதியாளர்களின் கூற்றுப்படி, உள்நாட்டு ரின் மீன்களின் நிலை வெளிநாட்டு ரின் மீன்களின் நிலைக்கு நிகராக இல்லை எனவும், அதனை சரி செய்ய வேண்டியது ரின் மீன் தொழிலில் ஈடுபட்டுள்ள உற்பத்தியாளர்களின் பொறுப்பாகும். அரசின் மூலம் ஆலோசனை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கடற்றொழில் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்குமாறு தெரிவித்த அமைச்சர், இவற்றின் தரம் சரியாக இருக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.
சுமார் தரமான 18 உள்ளுர் ரின் மீன் தொழிற்சாலைகள இலங்கை தர நிர்ணய பணியகத்தால் அங்கீகரிகப்பட்டுள்ளதாகவும், அங்கீகரிக்கப்படாத தொழிற்சாலைகள் பல உள்ளதாகத் தனக்குத் தெரிய வந்துள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர், ரின் மீன் தொழில் வளர்ச்சியால் உள்ளுர் மீனவர்கள் தங்களது மீன்களை விற்பனை செய்யக்கூடிய வாய்ப்பு கிடைக்கும் என்னும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த, கடற்றொழில் அமைச்சின் செயலாளர் செல்வி நயனா குமாரி, கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு சுசந்த கஹவத்த ஆகியோர்கள அடங்கலாக பெருமளவூ அரச அலுவலர்களும் கலந்து கொண்டிருந்தனர்.