வட மாகாணத்தின் அபிவிருத்தி மற்றும் மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கு 2024இன் வரவு செலவுத் திட்டத்தில் பெருமளவு பணம் ஒதுக்குவதற்கு ஜனாதிபதி அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.
அமைச்சர் இங்கு கருத்து தெரிவிக்கையில் 2024.02.01ஆந் திகதி வேலணை பிரதேசத்தின் பிரதேச செயலகப் பிரிவில் நடைபெற்ற பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டத்தின்போது இவ்வாறு தெரிவித்தார். இது வடக்கு மக்களுக்கு கிடைத்த மிகவூம் முக்கியமான சந்தர்ப்பமாகும், எனவே வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்படும் பணத்தைப் பயன்படுத்தி மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கு பயனுள்ள திட்டங்களைத் தயாரிக்க வேண்டும். வீதி அபிவிருத்தி போன்ற உட்கட்டமைப்பை மேம்படுத்துவதைவிட பொருளாதாரத்துக்குப் பங்களிக்கும் திட்டங்களை செயற்படுத்த வேண்டுமெனவும், இதற்கு அனைத்து அரச அலுவலர்களும் அர்ப்பணிப்புடன் அத்யாவசிய திட்டங்களை உடனடியாக ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் வேலணை பிரதேச செயலாளர் அடங்கலாக அரச அலுவலர்கள் பெருமளவினர் கலந்து கொண்டிருந்தனர்.