முல்லைத்தீவு பிரதேசத்தில் கரைவலை தொழிலில் ஈடுபடும் மீனவ சங்கங்களின் அலுவலர்கள் குழுவினர்இ தமது தொழிலை நடாத்துவதில் ஏற்படும் சிக்கல் குறித்து அமைச்சருக்குத் தெரியப்படுத்துவதற்கு 2024.02.06ஆந் திகதி கொழும்பு கடற்றொழில் அமைச்சில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து கலந்துரையாடினர்.
இந்த கலந்துரையாடலில் மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் அமைச்சருக்கு சுட்டிக் காட்டியதாவது, தமது கரைவலைத் தொழிலில் ஈடுபடுவதற்கு தொழிலாளர்கள் பற்றாக்குறை காணப்படுவதால் விஞ்ச்சைப் பயன்படுத்தி கரைவலையை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்குமாறும்இ தமது படகுத் துறையில் வலை உபகரணங்கள் தயாரிப்பதற்கு இடமில்லை எனவும், இதனால் பெரும் சிரமத்தை எதிர்கொள்வதால் வலை தயாரிக்கு; இடமொன்று மற்றும் தமது சங்கம் இயங்குவதற்கு அலுவலகக் கட்டிடம் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், அவ்வப்போது வரும் புலம்பெயர் மீனவர்களால் வலை சுற்றி வளைக்கும் எல்லை மாறுபடுவதால், அதற்குப் பொருத்தமான வேலைத் திட்டமொன்றை தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், தற்போது ஒரு வருட காலப் பகுதிக்கான அனுமதிப் பத்திரத்தை நிரந்தரமாக தருமாறும் தெரிவித்தனர். மேலும் வலை விரிப்பதற்கு படகொன்று வழங்குமாறும் மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் அமைச்சரிடம் கோரினர்.
இங்கு கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், கரைவலை தொழிலில் வலையை ஏற்றுவதற்கு பெருமளவிலான ஆட்கள் தேவைப்படுவதாக தாம் புரிந்து கொண்டுள்ளதாக, மேலும் அதற்கான தொழிலாளர்கள் குறைவாக இருப்பதை தான் புரிந்து கொண்டுள்ளதுடன், விஞ்ச்களைப் பயன்படுத்த அனுமதி வழங்கலாம். ஆனால் உழவு இயந்திரங்களைப் பயன்படுத்தி விஞ்ச்களை இழுக்க அனுமத வழங்க முடியாது எனத் தெரிவித்தார். மேலும் எதிர்காலத்தில இப்பிரதேசங்களில் சுற்றுப் பயணம் செல்லும்போது தற்போதுள்ள குறைபாடுகளைக் கண்டறிந்து உடனடியாக அதனை சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், இம்முறை ஒதுக்கப்பட்ட நிதியை மீன்பிடிக் கைத்தொழிலின் அபிவிருத்திக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதுடன்இ உடனடியாக முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படுமெனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இச்சந்தர்ப்பத்தில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் செல்வி நயானா குமாரி சோமரத்னஇ கடற்றொழில், நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு சுசந்த கஹவத்த ஆகியோர்கள் அடங்கலாக உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.