இலங்கையின் மீன்பிடித் தொழில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது.
குறிப்பாக 1948 ஆம் ஆண்டு பிரித்தானிய ஆட்சியில் இருந்து இலங்கை சுதந்திரமடைந்த பின்னர், கடல் மீன்பிடித்துறை வாழ்வாதார நடவடிக்கையாக இருந்து பாரிய அளவிலான தொழிலாக பரிணமித்தது.
நமது நாடு பெரும் கடலால் சூழப்பட்ட அழகிய தீவாக இருந்தாலும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மீன்பிடித் தொழிலின் பங்களிப்பில் திருப்தி அடைய முடியாது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வையான " வளமான நாடு - அழகான வாழ்வு" என்பதற்கு அமைவாக உற்பத்திப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவது நமது முக்கியமான மற்றும் முதன்மையான பணியாகும். அதில் மீன்பிடி தொழில்துறை முன்னேற்த்திற்றம் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஜனாதிபதியாக பதவியேற்றதும், மீனவ சமூகத்திற்கு வழங்கப்பட்ட விசேட கவனம் காரணமாக, முடங்கிய மீன்பிடித் தொழிலை மீட்பதற்கான கொடுப்பனவை வழங்கினார்.
மேலும், உற்பத்தித் திறனை அதிகரிக்க சிறு மீனவர்களுக்கு அரசின் தலையீட்டின் மூலம் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகள் வழங்கப்பட்டது. மீன்பிடித் தொழிலில் நீடித்து நிலைக்கத் தேவையான சூழலை உருவாக்கி, மீன்பிடித் தொழிலை பொருளாதாரச் செயல்முறைக்கு தீவிரமாக பங்களிக்கும் துறையாக மாற்றுவதற்கான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
இலங்கையில் பிடிக்கப்படும் மீன்களின் தரத்தை பாதுகாத்து மீன் பிடியின் பின்னரான பாதிப்பை குறைத்து சர்வதேச அளவில் வரவேற்பை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அந்த நோக்கத்திற்காக, உவர் நீர் மற்றும் நன்னீர் நீர் மீன்வள ஆராய்ச்சியை மேற்கொண்டு, மீனவ சமூகத்திற்கு நன்மைகள் கிடைக்கும் வகையில் முறையான பொறிமுறையை தயாரிப்பதே எங்கள் நோக்கமாகும்.
நாட்டை மறுமலர்ச்சிக்கு இட்டுச் செல்லும் ஜனாதிபதியின் நோக்கத்திற்கு அமைய கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வள அமைச்சு மற்றும் அதனுடன் இணைந்த அனைத்து நிறுவனங்களும், மீனவச் சமூகம் பெருமையுடன் பணியாற்றக்கூடிய சூழலை உருவாக்கும் வகையில் புதிய தொலைநோக்கு பார்வையுடன் எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள உறுதிபூண்டுள்ளன என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.