ILO C 188 - 2007 மீன்பிடி கைத்தொழில் மற்றும் அது தொடர்பான தொழில் வாய்ப்புகளை உறுதிப்படுத்துவதற்கு தயாரிகப்பட்டுள்ள இலங்கை தொடர்பான வரைவின் ஒழுங்குவிதிக் கோவை கடற்றொழில் அமைச்சருக்கு மற்றும் தொழில் அமைச்சருக்கு வழங்குவதற்கான 2023.12.08ஆந் திகதி கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்ற கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
மீனவர்கள் தமது தொழிலில் ஏற்படுத்தும் பாதுகாப்பு தொடர்பான ILO C 188 மாநாட்டில் கடற்றொழில் அமைச்சர் உரையாற்றும்போது, மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் மீன்பிடித் தொழிலின் முதுகெழும்பு எனவும், ஆனால் அவர்களின் தொழில் மிக ஆபத்தானதும் வாழ்க்கை பாதுகாப்பு பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுப்பதுடன், இதற்கு அவர்களுக்கு தொழிலில் பாதுகாப்பு வழங்குவதற்குத் தேவையான சட்ட பிரமாணங்கள் உருவாக்குவது அத்தியாவசியமானது என்றும் தெரிவித்தார்.
உலக மீனவ மக்களின் பாதுகாப்பை சர்வதேச தொழிலாளர் அமைப்பு மற்றும் கடற்றொழில் அமைச்சு, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு தொழில் ஊக்குவிப்பு அமைச்சு, கடற்றொழில் திணைக்களம், அவுஸ்திரேலியா அரசு மற்றும் நோர்வே அரசும் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கையில் 1996இன் 2ஆம் இலக்க கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் ஒழுங்குவிதிகளுக்கு புதிய சட்ட திட்டங்கள் உள்ளிட்டு அது தொடர்பான நீண்ட ஆய்வுக்குப் பின்னர் தயாரிக்கப்பட்ட வரைவு சமர்ப்பிப்பதற்கு இந்த மாநாட்டில் கடற்றொழில் அமைச்சர் மேலும் தெரிவித்தபோது, தொழிலில் ஈடுபடும் பிள்ளையாக தான் இது தொடர்பாக மிகுந்த ஆர்வத்துடன் இருந்ததாகவும் தனது தந்தையும் மாமாவும் இலங்கையில் தொழிற் சங்கங்களின் முன்னோடியாக உலக தொழிலாளர் அமைப்புடன் இணைந்து செயற்பட்டதாகவும் தனக்கும் அதே செயற்பாடு உள்ளதாகவும் தெரிவித்தார்.
ILO C 188-2007, மீன்பிடி கைத்தொழில் மற்றும் அது தொடர்பான தொழில் வாய்ப்பில் ஈடுபடுவதற்கு இலங்கை சாதகமான நடவடிக்கையாக ILO இன் ஆதரவைப் பெற்று DEAT மற்றும் நோர்வே அரசின் ஆதரவுடன் தயாரிக்கப்பட்ட ஒழுங்குவிதிக் கோவை கடற்றொழில் அமைச்சர் திரு டக்ளஸ் தேவானந்தா மற்றும் வெளிநாட்டு தொழில் ஊக்குவிப்பு அமைச்சர் திரு மனு~ நாணயக்கார ஆகியோர்கள் இந்நிகழ்வில் வரவேற்கப்பட்டனர். இங்கு மேலும் கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர் திரு டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அர்த்தமுள்ள உரையாடல்கள் மற்றும் ஒத்துழைப்பு நடவடிக்கை மேற்கொள்வது முக்கிய விடயமாக ஊ188 வேலைத் திட்டம் உலகளாவிய ரீதியாக மீன்பிடித் தொழில் தற்போது மிக ஆபத்தான தொழிலில் ஒன்றாக இருப்பதாகவும் ILOஇனால் அடையாளம் காணப்பட்ட சர்வதேச ஒப்பந்தமான C188 உலக முழுவதும் உள்ள மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சுனிசி சேவை விதிமுறைகள் உறுதிப்படுத்தும் நோக்கில் வழிகாட்டுதல் மற்றும் பரிந்துரைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இலங்கையில் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச் சத்து, வர்த்தகம், வேலை வாய்ப்பு மற்றும் ஏற்றுமதி வருவாய் ஆகியவற்றில் மீன்பிடித் துறை முக்கிய பங்கு வகிப்பதாகத் தெரிவித்த அமைச்சர், தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் அதிகம் பாதிக்கப்பட்டது மீன்பிடித் துறையாக இருப்பதுடன், நாட்டின் மீன்பிடித் துறையை வலுப்படுத்தவும் யுனிசி சேவை நிலையை மேம்படுத்துவதற்கு அரசு அரசின் அர்ப்பணிப்பைக் காட்டும் வகையில் C188 உறுதிப்படுத்துவதற்கு தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு தொழில் அமைச்சு மற்றும் கடற்றொழில் அமைச்சும் இணைந்து அமைச்சரவைப் பத்திரம் தயரிக்கும் நடவடிக்கை இன்று மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த அமைச்சரவைப் பத்திரம் தயாரிக்கும்போது இந்த வரைவு மேற்கொள்ளப்பட்ட ஒழுங்குவிதிக் கோவை முக்கிய ஆவணம் எனவூம் மேலும் தெரிவித்தார். கடற்றொழில் அமைச்சர் அனைத்து பங்குதாரர்களின் ஆதரவுடன் இந்த ஒழுங்குவிதியை இலங்கையில் செயற்படுத்த முடியுமென நம்புகின்றௌம். மீனவர்களுக்கு அவர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் மற்றும் பாதுகாப்பை வழங்க வேண்டுமெனவும் மீன்பிடி நடவடிக்கைக்கான சுனிசி வேலை நிகழ்ச்சி நிரல் அமைச்சும் முழுமையாக ஏற்றுக் கொள்கிறது என்றும் அவர் தெரிவத்தார்.
இங்கு கருத்து தெரிவித்த தொழிலாளர் அமைச்சர் திரு மனு~ நாணயக்கார அவர்கள் ILO C188 பிரமாணத்தை ஏற்றுக் கொள்வது தொடர்பாக தனது ஆதரவைத் தெரிவித்ததுடன், மீன்பிடித் தொழிலை மரியாதையுடன் ஏற்றுக் கொள்வது சட்டபூர்வமாக பொறுப்பு மட்டுமன்றி ஒரு தார்மீக கடமையாக இருப்பதுடன் மீனவர்கள் உட்பட இலங்கையின் தனியார் பிரிவின் சேவையாளர்களுக்கு மிக வலுவான சமூகப் பாதுகாப்பு அமைப்பை உருவாக்குவது அமைச்சின் முக்கிய பணியாகும் என்றும் கூறினார்.
இங்கு கருத்து தெரிவித்த சிலர் C188 பிரமாணத்தை உறுதிப்படுத்தி அடுத்த கட்ட நடிவக்கை தொடர்பாக கருத்து தெரிவித்ததுடன் ILO C 188 பிரமாணத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வரைவு நியதிக் கோவை தொடர்பாக துறைசார் பல்வேறு தரப்பினர்களும் தமது கருத்துக்களைத் தெரிவித்தனர். இந்த பிரமாணத்தின் முக்கியத்துவம் பற்றி சர்வதேச தொழிலானர் அமைப்பின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அலுவலகத்தின் பணிப்பாளர் திருமதி சிம்ரின் சிங் அவர்களும் கருத்து தெரிவித்தார்.
இந்நிகழ்வின்போது இலங்கையின் அவுஸ்திரேலிய தூதுவர் திரு போல் ஸ்டீவன், சர்வதேச தொழிலாளர் அமைப்பின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அலுவலகத்தின் பணிப்பாளர் திருமதி சிம்ரின் சிங், வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து ரத்னாயக்க ஆகியோர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.