உள்ளுர் மீன் உணவு ஏற்றுமதியாளர்களின் பலமான கோரிக்கையாக இருந்த தரக் கட்டுப்பாட்டு அலகு கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலைய வளாகத்தில் 2024.01.26ஆந் திகதி அன்று திறந்து வைக்கப்பட்டது.
வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும்; மீன் உற்பத்தி பொருட்களின் நிலையைப் பரிசோதிக்கும் நோக்குடன் நிறுவப்பட்ட தரக் கட்டுப்பாட்டுப் பிரிவை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், உள்ளுர் மீன் உணவு ஏற்றுமதியாளர்களிடமிருந்து இலங்கைக்கு பெருமளவு டொலர் கிடைப்பதாகவும், அத்தகைய தேவையைப் பூர்த்தி செய்வதற்காக தரக் கட்டுப்பாட்டு நியமச் சான்றிதழைப் பெறுவதில் உள்ள சிமங்களால் அவர்களுக்குள்ள தடைகளை நீக்குவதற்கு இந்த புதிய அலுவலகம் திறந்து வைப்பதற்கு ஜனாதிபதி அவர்களின் ஆலோசனையின் பேரில் கடற்றொழில் திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்கப்பட்டதாகவும், அதனை முறையாக முன்னெடுத்துச் செல்வது தொடர்பாக தான் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாவும், இதற்கமைய ஏற்றுமதியாளர்களுக்கு 24 மணி நேரமும் தங்களது நடவடிக்கையை சிரமமின்றி மேற்கொள்ள முடியுமெனவும் தெரிவித்தார்.
இதற்கு இறக்குமதி ஏற்றுமதி திணைக்களத்தின் மற்றும் இலங்கை விமான சேவை நிறுவனமும் அதிகளவூ ஆதரவு வழங்கியமைக்கு தனது நன்றியை தெரிவிப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த, கடற்றொழில் அமைச்சின் செயலாளர் செல்வி நயனா குமாரி, கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு சுசந்த கஹவத்த ஆகியோர்கள அடங்கலாக அரச அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.