
கிளிநொச்சி கரச்சி பிரதேச செயலகப் பிரிவுக்குரிய புதுமுறிப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள நன்னீர் குளங்களுக்கு 02 இலட்சம் மீன் குஞ்சுகளை விடுவிக்கும் வேலைத் திட்டத்தின் கீழ் கடந்த 19ஆந் திகதி மீன் குஞ்சுகளை விடுவிக்கும் தேசிய வைபவத்தின் முதற் கட்டமாக 150,000 மீன் குஞ்சுகளும் 2023.12.04ஆந் திகதி இரண்டாம் கட்டமாக 50,000 மீன் குஞ்சுகளும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் விடுவிக்கப்பட்டது.
இதன்போது புதுமுறிப்பு இனப்பெருக்க நிலையத்தில் செயற்பாடு மற்றும் முன்னேற்றம் தொடர்பாக ஆராய்ந்து பார்த்த அமைச்சர், இதனை மேம்படுத்துவதற்கு எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கினார்.
இச்சந்தர்ப்பத்தில் தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரி, தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் வட மாகாண அலுவலகத்தின் பணிப்பாளர், பொறியியலாளர் அடங்கலாக மீனவர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
 
                                          




 
						