en banner

 DSC7884.jpgஇலங்கைக்கும் நோர்வேக்கும் இடையில் கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்புத் துறையிலான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களுக்கும் நோர்வேயின் பேர்கன்-வெஸ்ட்லாண்ட் பில்கே (Bergen-Vestland Flyke) கொன்சல் திரு. ஸ்டர்லே எச். பெடர்சன் (Sturle H. Pedersen) அவர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று (16) அமைச்சில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே. கோலித கமல் ஜினதாச அவர்களும் கலந்துகொண்டார்.

எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் அமைச்சர் நோர்வேக்கு மேற்கொள்ளவுள்ள உத்தியோகபூர்வ விஜயம் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. தற்போதைய அரசாங்கம் இலங்கையில் ஊழலற்ற நிர்வாகத்தை நிறுவியுள்ளதால், சர்வதேச மட்டத்தில், குறிப்பாக நோர்வே முதலீட்டாளர்கள் மத்தியில் இலங்கை மீது உறுதியான நம்பிக்கை கட்டியெழுப்பப்பட்டுள்ளதாக திரு. பெடர்சன் இங்கு வலியுறுத்தினார். அமைச்சரின் இவ்விஜயமானது, இந்நாட்டின் கடற்றொழில் துறைக்கு புதிய முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கான ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடற்றொழில் துறையில் உலகின் முன்னணி மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் நோர்வேயின் ஆதரவுடன், இலங்கையின் 'நீலப் பொருளாதாரத்தை' (Blue Economy) பலப்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும். அதற்கமைய, பின்வரும் துறைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது:

* சமுத்திரவியல் ஆராய்ச்சி மற்றும் நிலைபேறான கடற்றொழில் முகாமைத்துவம்.
* கடல்சார் புத்தாக்கம் (Maritime innovation).
* மீன்பிடித் துறைமுக உட்கட்டமைப்பு மற்றும் மீன்பிடிப் படகுக் கட்டமைப்பை நவீனமயமாக்கல்.
* அரச-தனியார் பங்குடைமைகள் (PPPs) ஊடாக தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட, மீளெழும் திறனுடைய கடற்றொழில் கைத்தொழிலைக் கட்டியெழுப்புவதற்கான மூலோபாய முதலீடுகள்.

இலங்கையின் கரையோர சமூகங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் சமுத்திர வளங்களைப் பாதுகாத்தல் ஆகிய நோக்கங்களுக்காக, நோர்வே நிறுவனங்கள் மற்றும் கைத்தொழில் தலைவர்களுடன் இந்த உரையாடலைத் தொடர்ச்சியாக முன்னெடுப்பது மற்றும் எதிர்கால உறவுகளை மேம்படுத்துவது தொடர்பிலும் இங்கு மேலும் கலந்துரையாடப்பட்டது.

 DSC7887.jpg

 DSC7899.jpg

சமீபத்திய செய்திகள்

Youtube