கண்காட்சியின் திட்டமிடல், ஒருங்கிணைப்பு மற்றும் வெற்றிகரமான செயல்பாட்டில் முக்கிய பங்காற்றிய பிரதி அமைச்சர் ரத்ன கமகே, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர், அமைச்சின் மூத்த அதிகாரிகள், எமது நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பணிப்பாளர்கள், ஊடகப்பிரிவினர், தொழில்நுட்ப நிபுணர்கள், மற்றும் அனைத்து பணியாளர்கள் அனைவருக்கும் அமைச்சின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.
உலக மீனவர் தினத்தை முன்னிட்டு இலங்கையில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட அக்வா பிளான்ட் - 2025 சர்வதேச மீன்வள கண்காட்சியை வெற்றிகரமாக நடத்துவதற்கு பங்காற்றிய அனைத்து தரப்பினருக்கும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் சார்பில் எமது இதயப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன் என கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
இந்த சர்வதேச நிகழ்வுக்காக அனைத்து ஏற்பாடுகளையும் பொறுப்புடன் வழிநடத்திய தரப்பினருக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.
கண்காட்சியின் திட்டமிடல், ஒருங்கிணைப்பு மற்றும் வெற்றிகரமான செயல்பாட்டில் முக்கிய பங்காற்றிய பிரதி அமைச்சர் ரத்ன கமகே, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர், அமைச்சின் மூத்த அதிகாரிகள், எமது நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பணிப்பாளர்கள், ஊடகப்பிரிவினர், தொழில்நுட்ப நிபுணர்கள், மற்றும் அனைத்து பணியாளர்கள் அனைவருக்கும் அமைச்சின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்நிகழ்வில் பங்கேற்று அதன் முக்கியத்தை உயர்த்திய பிரதமர், அமைச்சர்கள், இராஜதந்திரகள், உள்ளூர் மற்றும் சர்வதேச விருந்தினர்கள் அனைவருக்கும் மரியாதையுடன் கூடிய நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்த கண்காட்சி, நாட்டின் மீன்வளத் துறை முன்னேற்றம், தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு ஆகிய துறைகளில் புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமைச்சின் இந்த முன்னெடுப்பு, எதிர்காலத்தில் மீன்வளத் துறையின் நிலையான வளர்ச்சிக்கு வலுவான தளமாக அமையும் என நம்புகின்றோம்.
கண்காட்சி தொடர்பான செய்திகளை வெளியிட்ட பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், வானொலிகள் மற்றும் இணைய ஊடகங்களுக்கும் நன்றிகள்......!