பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவ்வாறு பாதிக்கப்பட்ட துறைகள் மீது கவனம் செலுத்தி அவர்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு எனவும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்கள் இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார்.
இந்த நோக்கத்தை கருத்தில் கொண்டு, மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மக்களின் பொருளாதாரத்தில் முக்கிய காரணியாக விளங்கும் எரிபொருள் செலவைக் குறைக்கும் வகையில், ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் விசேட எரிபொருள் கொடுப்பனவொன்றை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பொதுவான கொடுப்பனவுகளுக்கு மேலதிகமாக, மீனவ மக்களை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த விசேட கொடுப்பனவுத் திட்டம் ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும்.
ஒரு நாள் மீன்பிடிப் படகுகளுக்கான எரிபொருள் கொடுப்பனவு:
* கடற்றொழில் திணைக்களத்தின் புள்ளிவிபரங்களுக்கு அமைய, நாட்டில் இயங்கும் 37,500 ஒரு நாள் மீன்பிடிப் படகுகளுக்கு இந்தக் கொடுப்பனவு கிடைக்கும்.
* சாதாரண இயந்திரங்களைக் கொண்ட இந்தப் படகுகளுக்கு பெட்ரோல், டீசல் அல்லது மண்ணெண்ணெய் என எந்த எரிபொருளைப் பயன்படுத்தினாலும், தற்போதைய 100 ரூபா குறைப்புக்கு மேலதிகமாக, ஒரு லீட்டருக்கு மேலும் 50 ரூபா விசேட கொடுப்பனவாக வழங்கப்படும்.
* இதன்படி, ஒரு நாள் மீன்பிடிப் படகு ஒன்றிற்கு நாளொன்றுக்கு அதிகபட்சம் 25 லீட்டர் வீதம், ஒரு மாதத்தில் 25 நாட்களுக்கு (அதிகபட்சம் 625 லீட்டர்களுக்கு) லீட்டருக்கு 50 ரூபா வீதம் கொடுப்பனவு வழங்கப்படும்.
* சாதாரண படகு உரிமையாளர் ஒருவருக்கு மாதத்திற்கு 31,250 ரூபா வீதம் 3 மாத காலத்திற்கு இக்கொடுப்பனவு கிடைக்கும். குறித்த தொகையானது உரிமையாளரால் உறுதிப்படுத்தப்பட்ட வங்கிக் கணக்கில் நேரடியாக வைப்பிலிடப்படும்.
பல்நாள் மீன்பிடிப் படகுகளுக்கான கொடுப்பனவு:
* கடற்றொழில் திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள 5,500 பல்நாள் மீன்பிடிப் படகுகளுக்கு இந்தக் கொடுப்பனவு கிடைக்கும்.
* எதிர்வரும் 03 மாதங்களுக்காக 150,000 ரூபா கொடுப்பனவை ஒரு தடவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
* இந்தக் கொடுப்பனவைப் பெறுவதற்கு, கடலுக்குப் புறப்படும் போது கடற்றொழில் திணைக்களத்தினால் வழங்கப்படும் புறப்பாட்டுப் படிவத்தை (Departure Form) பூர்த்தி செய்திருத்தல் கட்டாயமாகும்.
இந்த விசேட கொடுப்பனவுத் திட்டத்தின் ஊடாக, மீன்பிடித் தொழிற்துறையை மேலும் பலப்படுத்தி, பாதிக்கப்பட்டுள்ள மீனவ சமூகத்தின் பொருளாதாரச் சுமையைக் குறைத்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.





