en banner

WhatsApp Image 2026 04 18 at 14.10.05நார்வேயின் பேர்கன் (Bergen) நகரில் நடைபெற்று வரும் ‘One Ocean Week’ சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டுள்ள கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையிலான இலங்கைத் தூதுக்குழுவினர், நார்வேயின் மிகப்பெரிய கடல் உணவு, நீரியல் வளர்ப்பு மற்றும் பதப்படுத்துதல் நிறுவனமான லெரோய் (Lerøy Seafood Group) நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஹெனிங் பெல்டெஸ்டாட் (Henning Beltestad) அவர்களை நேற்று (17) சந்தித்து விசேட கலந்துரையாடலை மேற்கொண்டனர்.

இந்தச் சந்திப்பில் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே. கோலித கமல் ஜினதாச மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எஸ்.ஜே. கஹவத்த ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதன்போது லெரோய் நிறுவனத்தின் சர்வதேச அனுபவங்கள் குறித்துக் கருத்துக்கள் பரிமாறப்பட்டதுடன், அந்நிறுவனம் தற்போது இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட ஆசிய சந்தைகளை இலக்காகக் கொண்டு தனது வர்த்தக நடவடிக்கைகளை விரிவுபடுத்தியுள்ள விதம் குறித்துக் கலந்துரையாடப்பட்டது. இலங்கையின் கடற்றொழில் துறையின் தற்போதைய நிலை, அங்கு காணப்படும் வாய்ப்புகள் மற்றும் எதிர்கால முதலீட்டுத் திறன்கள் குறித்து அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இதன்போது விரிவாக விளக்கமளித்தார்.

இலங்கையின் மீன் பதப்படுத்தும் தொழிற்துறை (Seafood Processing Industry) குறித்து லெரோய் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி தனது விசேட ஆர்வத்தை வெளிப்படுத்தினார். அதற்கமைய, இலங்கையின் கடல் உணவு பதப்படுத்தும் துறையுடன் இணைந்து செயற்படுவதற்கும், தொழில்நுட்ப மற்றும் வணிக ரீதியான வலுவான ஒத்துழைப்பை முன்னெடுப்பதற்கும் வருங்காலத்தில் நேரடியாகத் ஒத்துழைப்பு வழங்குவதாக அவர் இலங்கைத் தூதுக்குழுவினரிடம் உறுதியளித்தார்.

சமீபத்திய செய்திகள்

Youtube