கிளிநொச்சியில் நிறுவப்பட்டுள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் விவசாய பீடம் ஜப்பான் அரசின் உதவியின் கீழ் புதிதாக நிறுவப்பட்ட ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவனத்தின் கட்டிடம் திறந்து வைக்கும் வைபவம் 2021.01.25ஆந் திகதி நடைபெற்றது.
இங்கு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக திரு சிறி சத்குண ராஜா அவர்கள் கருத்து தெரிவிக்கையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அடிக்கடி எடுத்த நடவடிக்கையினால்தான் கிளிநொச்சி அரியாலை நகர பிரதேசத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழக பீடம் நிறுவப்பட்டது. கடந்த பத்து வருடங்களுக்கு முன்னர் மக்கள் வசிக்காத இந்தப் பிரதேசத்தில் இராணுவத்திலிருந்து இப்பகுதியை விடுவித்து தருமாறு தற்போதைய பிரதம மந்திரி மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் ஜனாதிபதியாக இருந்தபோது கொக்காவில் தொலைத் தொடர்பு கோபுரத்தை திறந்து வைத்த சந்தர்ப்பத்தில் கலந்து கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டதாக துணைவேந்தர் கூறினார்.
இச்சந்தர்ப்பத்தில் கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர்கள் கலந்து கொண்டதுடன் இங்கு தமிழில் தேசிய கீதம் இசைக்கும் வாய்ப்பும் கிடைத்தது.