எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து காரணமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு முடியாத மீனவர்களுக்கு நான்காவது சுற்று இழப்பீடு வழங்க எதிர்வரும் 2023.04.10ஆந் திகதி முதல் வழங்குவதற்கு தற்போது திட்டமிடப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திலிருந்து ரூபா 1,514.9 மில்லியன் திறைசேறியிலிருந்து கிடக்கப் பெற்றுள்ளதாகவும் இப்பணம் தற்போது கடற்றொழில் அமைச்சின் ஊடாக கம்பஹா, கொழும்பு மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களின் மாவட்ட செயலாளருக்கு கிடைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், வாழ்வாதாரத்தை இழந்த 16,867 மீனவர்களுக்கு நான்காவது சுற்று இழப்பீடு வழங்கும் நிகழ்வு 2023.04.10ஆந் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட செயலாளர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
தற்போது சம்பந்தப்பட்ட காப்புறுதி நிறுவனத்திலிருந்து ரூபா 1,477 மில்லியன் பெறப்பட்டுள்ளதாகவும், நாக்காவது சுற்று இழப்பீட்டில், குறிப்பாக மீன்பிடி தொழில் சார்ந்த உற்பத்திகளில் ஈடுபட்டு வரும் மீனவ குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், இதற்கமைய தற்போது வாழ்வதாதரத்தை இழந்த மீனவ குடும்பங்களுக்கு ஆகக் கூடிய தொகையாக ரூபா 330,000வும் குறைந்த பட்சமாக ரூபா 50,000வும் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறிய அமைச்சர், எதிர்காலத்தில் மீனவர்களுக்கு அமைச்சின் ஊடாக இழப்பீடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.