இலங்கையில் நன்னீர் மீன்பிடிக் கைத்தொழிலை அபிவிருத்தி செய்வதற்கு ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் ஊடாக ஜப்பான் அரசினால் 03 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கும் இந்த சந்தர்ப்பத்தில் இலங்கை அரசின் சார்பில் தான் நன்றி தெரிவிப்பதாகவும்இ இந்த நிதி வழங்கும்போது கடற்றொழில் அமைச்சு மற்றும்;
ஜப்பாண் துhதுவர் மற்றும் இலங்கை ஐக்கிய நாடுகளின் வதிவிட இணைப்பாளருக்கிடையிலான உடன்படிக்கையில் கையெழுத்திடும்போது கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த அவர்கள் தெரிவித்தார் 2024.04.25ஆந் திகதி ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் அலுவலகம் அமைந்துள்ள கொழுமப்பில் ருNழு கட்டிடத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், இலங்கையின் நன்னீர் மீன்பிடிக் கைத்தொழிலை நாடு முழுவதிமுள்ள அனைத்து மாவட்டங்களிலும் மேற்கொள்ளவுள்ளதாகவும், இத்தொழிலுக்கு மீன் குஞ்சுகளை வழங்குவதற்குத் தேவையான இனப் பெருக்க நிலையங்கள் இல்லாமையால் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் மீன்ளை வளர்ப்பதற்கு மிகுந்த சிரமமப்படுவதாகவும் தெரிவித்தார். இதற்கான தீர்வினை வழங்குவதற்கு ஐக்கிய நாடுகளின் உணவூ மற்றும் விவசாய அமைப்பின் ஊடாக ஜப்பான் அரசு 03 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கியமை தொடர்பாக மேலும் நன்றி தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த 03 மில்லியன் அமெரிக்க டொலரின் மூலம் மட்டக்களப்பு, முல்லைத்தீவு, அனுராதபுரம் மற்றும் மொனராகல ஆகிய மாவட்டங்களின் மக்களினால் செயற்படுத்தப்படும் சிறிய நான்கு இனப்பெருக்க நிலையங்களை அமைப்பதற்கும், இந்த இனப்பெருக்க நிலையங்களில் மீன் குஞ்சுகள் பொறிக்கும் திறனை மேம்படுத்துவதற்கு நக்டா நிறுவனம் நீர்வாழின வளர்ப்பு அபிவிருத்தி நிலையங்கள் நான்கும் மற்றும் மக்களினால் செயற்படுத்தப்படும் இனப் பெருக்க நிலையங்களை மேம்படுத்துவதற்கும், மீனவ மக்களுக்கிடையே கூடுகளில் மீன் வளர்ப்பினை ஊக்குவிப்பதற்கும் மீனவ மக்களின் வாழ்வாதார திறனை அபிவிருத்தி செய்வதும் உணவு மற்றும் போசாக்கு பாதுகாப்பை மேம்படுத்துவதும் இந்த திட்டத்தின் குறிக்கோளாகுமென அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் நன்னீர் மீன்பிடிக் கைத்தொழிலை நிறுவுவதற்குத் தேவையான தொழில்நுட்ப அறிவினை வழங்குதல் மற்றும் மீன் இனப் பெருக்க நிலையங்களை முகாமைத்துவம் செய்வதற்குத் தேவையான அனைத்து உபகரணங்கள் மற்றும் அறிவினை இந்த செயற்றிட்டத்தின் மூலம் வழங்குவதற்கு நடவடிக்க எடுக்கப்படுமெனவும் தெரிவித்த அமைச்சர், எதிர்காலத்தில் வடமாகாணத்தில் கிளிநொச்சி வரை விரிவுபடுத்துவதாயின் அது மிகப் பெறுமதி வாய்ந்ததாக அமையுமெனவும் தெரிவித்தார்.
ஜப்பான் துhதுவர் கௌரவ மசுகோஸி அவர்கள் தமது உரையில் தெரிவித்தபோது, இலங்கை மற்றும் தீவுகள் இரண்டும் எமது பொருளாதாரம் மற்றும் கலாச்சாரங்களில் மீன்பிடித் தொழிலின் முக்கியத்துவம் பற்றி ஆழமாக வேரூன்றிய மதிப்புகளைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகள் என்ற வவகையில் இந்தப் பகிரப்பட்ட முக்கியத்தை இனம் கண்டு ஜப்பான் 2023ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் மீன்பிடி செயற்பாடடின் அபிவிருத்திக்கு சமுத்திர துறைக்கு உதவி வழங்க உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார். இந்த தொடர் முயற்சியுடன் இந்த புதிய திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாகவும், இலங்கையில் மீன்பிடி நடவடிக்கையை வலுப்படுத்தவும், அதன் மூலம் மீனவ மக்களின் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இச்சந்தர்ப்பத்தில் ஐக்கிய நாடுகளின் வதிவிட இணைப்பாளர் திரு மார்க் - அன்ட்ரூ பேன்வே மற்றும் இலங்கையின் குயூழு பிரதிநிதி உதிரு விமலேன்துன்சரன்இ கடற்றொழில் அமைச்சின் செயலாளர் செல்வி நயனா குமாரி சோமரத்ன ஆகியோர் அடங்கலாக பலரும் இங்கு கருத்து தெரிவித்தனர்.
இச்சந்தர்ப்பத்தில் கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் உட்பட உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டு கொண்டிருந்தனர்.