வரையறுக்கப்பட்ட தனியார் இலங்கை கடல் உணவுகள் பண்ணை Ceylon sea food farm) கம்பனியினால் ரூபா 1,000 மில்லியன் வரை முதலீடு செய்து கிளிநொச்சி மாவட்டத்தில் கவுதாரிமுனை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட 25 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட இறால் பண்ணை ஒன்று 2024.07.14ஆந் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த அவர்கள் திறந்து வைத்தார்.
இந்த இறால் பண்ணை கவுதாரிமுனை kn/68 ஆம் இலக்க கிராம அலுவலர் பிரிவான மினாரிஓடை பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இங்கு ஏராளமானோர் தொழில் புரிகின்றனர். இந்த செயற்றிடத்தை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த அவர்கள் ஆரம்பித்து வைத்தபோது, இறால் வளர்ப்பு மற்றும் நன்னீர் மீன் வளர்ப்பு, இந்நாட்டுக்கு அந்நிய செலவாணியை அதிகமாக கொண்டுவரும் பிரதன வழியாகும் எனத் தெரிவித்தார்.
இவ்வாறான செய்கைக்கு கடற்றொழில் அமைச்சு பெருமளவு உதவி ஒத்தாசைகள் வழங்கும் எனவும், இந்த உதவி உபகாரங்களைக் கொண்டு இவ்வாறான பண்ணைகளை உருவாக்கி அந்நிய செலாவணியைக் கொண்டுவருவதும் இந்நாட்டு முதலீட்டாளர்களின் கடமை எனவும், தெரிவித்தார். மேலும் எமது நாட்டு மக்களின் புரொட்டின் தேவையை பூர்த்தி செய்வதற்கு இறால் செய்கை மிக முக்கியமானதெனவும், சுட்டிக் காட்டிய அமைச்சர், குறிப்பாக சுற்றுலாத் துறை வளர்ச்சியடைந்துவரும் இந்நேரத்தில் சுற்றுலாப் பயணிகளின் முக்கிய உணவுகளில் ஒன்றான இறால் உற்பத்தியின் மூலம் முதலீட்டாளர்களின் வருமானத்தை அதிகாpக்க முடியுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இச்சந்தர்பத்தில் வட மாகாணத்தின் நக்டா நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகள் அடங்கலாக பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தனர்.