en banner

WhatsApp Image 2025 12 24 at 17.30.57கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி கோலித கமல் ஜினதாச அவர்களுக்கும், ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் (JICA) இலங்கைக்கான பிரதிநிதி திரு. குருனுமா கென்ஜி அவர்கள் உள்ளிட்ட தூதுக்குழுவினருக்கும் இடையில், அனர்த்தத்திற்குப் பின்னரான சூழலில் கடற்றொழில் துறையை மீளக் கட்டியெழுப்புவதற்கான முன்னுரிமைகளை அடையாளம் காண்பது குறித்த வெற்றிகரமான கலந்துரையாடலொன்று டிசம்பர் 16 ஆம் திகதி நடைபெற்றது.

துறைமுக நவீனமயமாக்கல், புதிய தொழில்நுட்பத்துடன் நீர்வாழ் உயிரின வளர்ப்பை மேம்படுத்துதல், சிறிய படகுகளின் பாதுகாப்பு, மற்றும் குளிரூட்டல் தொடர் அபிவிருத்தி (Cold Chain Development) ஆகிய பிரதான துறைகளுக்கு ஜைக்காவின் (JICA) ஆதரவைப் பெற்றுக்கொள்வது குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

இந்த முன்மொழிவுகளை மிகவும் சாதகமாக ஏற்றுக்கொண்ட JICA நிறுவனம், எதிர்காலத்தில் கடற்றொழில் துறையை இலக்காகக் கொண்ட ஒரு புதிய திட்டத்தை முன்மொழிய இணங்கியது. பேண்தகு கடற்றொழில் துறைக்கான பயணத்திற்கு இது ஒரு பெரும் பலமாகும்.

WhatsApp Image 2025 12 24 at 17.31.35

சமீபத்திய செய்திகள்

Youtube