en banner

80

வரலாற்றில் அதிகாரத்துக்குட்பட்ட தலைவர்கள் கடற்றொழில் மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகள் வழங்கி அவர்கள், ஏமாற்றப்படுவதாகவும், கடற்றொழில் மக்களை மேலும் ஏமாற்ற வேண்டாமென கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆராச்சி அவர்கள் கூறினார்.

அவ்வாறு ஏமாற்றத்துக்கு உள்ளாகாமல் தனது உரிமைகளை வெற்றி கொண்டு பெருமிதமிக்கவர்களாக நடவடிக்கை எடுப்பதனால் மீனவ மக்களுக்கும்  வேலைத்திட்டமொன்று இருக்க வேண்டுமெனவும், இந்த வேலைத் திட்ட கைத்தொழில் சம்பந்தமாக அறிவின் புரிந்துணர்வு  இல்லாத குழுக்களினால் தயாரிப்பதன் மூலம் மீண்டும் தொழிலை குழியில் வீழ்த்துவதை விலக்கி இது சம்பந்தமான ஆர்வம், புரிந்துணர்வு  கொண்ட குழுவினால் தயாரிப்பது முக்கியத்துவம் என இராஜாங்க அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

தேசிய கடற்றொழில் வேலைத் திட்டமொன்றைத் தயாரிப்பது சம்பந்தமாக நேற்று (30) நடைபெற்ற கலந்துரையாடலில் இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆராச்சி அவர்கள் இதுபற்றி குறிப்பிட்டார். தேசிய மீனவ மகா சம்மேளனத்தின் மாவட்ட பிரதிநிதிகள் உட்பட கடற்றொழில் துறைசார் செயலாற்று குழுவினரும் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

இங்கு தேசிய மீனவ மகா சம்மேளனத்தின் அலுவலர்கள் மற்றும் பிரதிநிதிகள் சுட்டிக் காட்டியபோது,  தேசிய மீனவ மகா சம்மேளனம் நிறுவப்பட்டு 10 ஆண்டுக்கு மேல் கடந்து விட்டாலும், எதிர்பார்த்த நோக்கத்தை அணுக முடியாமலுள்ளமை மீனவ மக்கள் மற்றும் கைத்தொழில் சம்பந்தமான அறிவு  இல்லாதவர்கள் இந்த துறையை நிருவகிப்பதன் காரணமாகவும், எந்நேரத்திலும் ஏமாற்றத்துக்குட்படும் தமது மக்களை மேலும் ஏமாற்றத்துக்கு உட்படுத்தாது இவ்வாறான வேலைத் திட்மொன்றை நடைமுறைப்படுத்தவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் வலியுறுத்தனார்.

அவர்களின் கோரிக்கையான இதற்கு தேசிய மீனவ மகா சம்மேளனத்தின் பிரதிநிதிகளை மாநாட்டுக்கு அழைத்து இந்த வேலைத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதாகவும். 

மீனவ மக்களின் இந்தக் கோரிக்கையை முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான நடவடிக்கைத் திட்டத்தை மேற்கொள்வதற்கு இங்கு தேசிய மீனவ மகா சம்மேளனத்தின் நிர்வாக செயலாளருக்கு ஆலோசனை வழங்கிய இராஜாங்க அமைச்சர் உத்தேச வேலைத் திட்டம் சம்பந்தமாக கடற்றொழில் தலைவர்களின் மற்றும் பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளைப்  பெற்றுக் கொள்வதற்குத் தேவையான வேலைத் திட்டம் தேசிய மீனவ மகா சம்மேளனத்தின் மூலம் திட்டமிடுவது முக்கியத்துவமானது எனவும் கூறப்பட்டது.

இதற்கமைய சகல ஆலோசனைகளையும் பெற்று சுருக்கக் குறிப்பு தயாரித்து சமர்ப்பித்த பின் அது சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு சமர்ப்பித்து தேவையான திருத்தங்கள் செய்து இறுதி வேலைத் திட்டத்தை வெளியிட நடவடிக்கை எடுப்பதாகவும் தேசிய மீனவ மகா சம்மேளனத்தின் தலையீட்டுடன் மேற்கொள்வது முக்கியத்துவமானது என இராஜாங்க அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

இதற்கமைய நடவடிக்கை எடுத்து தேசிய கடற்றொழில் திட்டம் உடனடியாக தயாரிப்பதற்குத் தீர்மாணிக்கப்பட்டது. 

சமீபத்திய செய்திகள்

Youtube