
கடந்த 2024.06.28ஆந் திகதி தெற்கில் உள்ள கடற்றொழில் துறைமுகங்களில் நிலவும் நிலையைக் கண்காணிப்பதற்கான சுற்றுப் பயணத்தில் ஈடுபட்ட கடற்றொழில் அமைச்சர், அதற்கமைய கிரிந்தையில் இருந்து பாணந்துறை வரையான கடற்றொழில் துறைமுகங்களில் நிலவும் தற்போதுள்ள குறைபாடுகளை உடனடியாகப் புனரமைப்பதற்கு ரூபா 1000 மில்லியன் அரசிடமிருந்து பெற்றுக் கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
2024.06.29ஆந் திகதி தென் மாகாணத்தின் பல கடற்றொழில் துறைமுகங்களின் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், தற்போது தென் மாகாணத்தின் மிகப் பெரிய கடற்றொழில் துறைமுகமான கந்தர கடற்றெழில் துறைமுகத்தின் பணி நடவடிக்கைகள் இந்த வருடத்துக்குள் நிறைவு செய்து மீனவர்கள் கடலுக்குச் செல்வதற்குத் தேவையான வசதிகள் ஏற்பாடு செய்யப்படும் எனத் தெரிவித்தார்.
இலங்கையில் முதல் தடவையாக தேசிய ரின்மீன் உற்பத்தி நிறுவனமான SLIC நிறுவனத்தினால் தனது நவீன தயாரிப்பான நீண்ட நாட்களுக்கு பழுதடையாமல் பாதுகாக்கக் கூடிய ஒருகிலோ எடை கொண்ட ஜக் மேக்கரல் செமன் பக்கற் ஒன்று சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு இன்று (21.06.2024) கடற்றொழில் அமைச்சில் இடம்பெற்றது.

கடந்த 05 மாதங்களுக்கு முன்னர், சிலாபம் கடலிருந்து அரபிக் கடலுக்கு மீன்பிடி நடவடிக்கைக்காகப் புறப்பட்டுச் சென்ற லோரன்ஸ் புத்தா எனும் பன்னாட் மீன்பிடிப் படகு மற்றும் அதிலிருந்த மீனவர்களும் சேமாலியா கடற் கொள்ளையர்களால், பிடிக்கப்பட்டனர்.

கடற்றொழில் அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள நிசாந்த விக்கிரமசிங்க இன்று (19) தமது அமைச்சில் வைத்து கடமைகளை பொறுப்பேற்றார்.
சமீபத்திய செய்திகள்
- நாட்டின் படகு ஏற்றுமதித் துறைக்கு புத்துயிர் : பேருவளை புதிய படகு இறங்குத்துறையின் செயல்பாடுகளை கடற்றொழில் துறைமுகக் கூட்டுத்தாபனத்திடம் ஒப்படைக்க இணக்கம் - பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் பங்கேற்புடன் விசேட கலந்துரையாடல்
- மாத்தறை மீனவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க விரைவான நடவடிக்கை: ஒதுக்கப்பட்ட பாரிய நிதியை முறையாகப் பயன்படுத்தி மீனவர்களுக்கு அதிகபட்ச சேவையை வழங்குங்கள் - அதிகாரிகளுக்கு பிரதி அமைச்சர் ரத்ன கமகே கடும் அறிவுறுத்தல்
- நாட்டைச் சூழவுள்ள கடற்பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும் : காங்கேசன்துறையிலிருந்து கற்பிட்டி வரை மீன்பிடி நடவடிக்கைகளைத் தவிர்க்கவும் – கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தின் அவசர அறிவிப்பு
- சமுத்திரப் பாதுகாப்பிற்கான சவால்களை வெற்றிகொள்ள சர்வதேச ஒத்துழைப்பு அவசியம் - ஜப்பானில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவிப்பு
- ஹம்பாந்தோட்டை மீனவ சமூகத்தின் பிரச்சினைகளைத் தீர்க்க விரைவான நடவடிக்கை : நிவாரணப் பொதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து பிரதி அமைச்சர் ரத்ன கமகேவிடமிருந்து விசேட அறிவுறுத்தல்கள்





