உலகெங்கிலும் வாழும் கிறிஸ்தவப் பெருமக்களுடன் இணைந்து, சமாதானத்தின் தேவனாகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் இந்த உன்னத தருணத்தில், உங்கள் அனைவருக்கும் சமாதானமும் மகிழ்ச்சியும் நிறைந்த இனிய நத்தார் உதயமாகட்டும் என இதயபூர்வமாக வாழ்த்துகிறேன்.
நத்தார் என்பது, கருணை, அன்பு மற்றும் தியாகத்தின் அர்த்தத்தை உலகுக்கு எடுத்துரைத்த, ஒரு புதிய நம்பிக்கையின் ஆரம்பமாகும். எமது மீனவ சமூகம், தமது அன்றாட வாழ்வின் சவால்களுக்கு மத்தியில், புதிய நம்பிக்கையுடன் தமது வியர்வையாலும் உழைப்பாலும் நாட்டைக் கட்டியெழுப்புவதைப் போலவே, இந்த நத்தார் பண்டிகைக் காலம் உங்கள் அனைவரின் வாழ்விலும் ஒரு புதிய புத்துணர்ச்சியையும் ஆசீர்வாதத்தையும் கொண்டு வரட்டும் என நான் பிரார்த்திக்கின்றேன்.
அண்மையில் நாம் முகங்கொடுத்த இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களின் வாழ்விலும், இந்த நத்தார் ஒரு புதிய ஆறுதலையும் நிம்மதியையும் கொண்டு வரட்டும் எனவும் பிரார்த்திக்கின்றேன்.
இந்த உன்னத நத்தார் பண்டிகைக் காலத்தில், அனைத்து பேதங்களையும் களைந்து, ஒருவருக்கொருவர் உதவி, ஒரே இலங்கை குடும்பமாக எழுச்சி பெற உறுதிகொள்வோமாக.
உங்கள் அனைவருக்கும், உங்கள் அன்புக்குரிய குடும்பத்தினருக்கும், நோயற்ற சுகவாழ்வுடன், சுபீட்சமான நத்தாரும், இனிய புத்தாண்டும் மலரட்டும்!
ரத்ன கமகே,
பிரதி அமைச்சர்,
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு.





