en banner

WhatsApp Image 2023 01 09 at 09.10.12

நாட்டில் நிலவும் டொலர் பிரச்சனைக்குத் தீர்வாக தேசிய உற்பத்தியை அதிகரிப்பதற்கு அரசு தற்போது நடவடிக்கை எடுத்துள்ளதுடன் அதன் பிரதான பிரிவான மீன்பிடித் துறையை அபிவிருத்தி செய்தல் மற்றும் அதன் ஊடாக கிடைக்கும் அந்நிய செலாவணியை அதிகரிக்கும் நோக்குடன் நாட்டில் கடலட்டை செய்கையை அபிவிருத்தி செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அத்துடன் முக்கியமாக வடக்கு கிழக்கு பிரதேசங்களில் மக்கள் பாரியளவில் கடலட்டை செய்கையில் தன்னை பழக்கப்படுத்த்தியுள்ளதுடன் அதன் மூலம் நாட்டில் அந்நிய செலாவணியைக் கொண்டு பிரதான வழியாக  கடலட்டை செய்கையை ஊக்குவிக்க முடியுமென கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவி;தார்.

அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கிளிநொச்சி கிரான்ச் பிரதேசத்தில் கடலட்டை செய்கையாளர்களின் 2023.01.08.ஆந் திகதி அன்று நடைபெற்ற உரிமைப்பத்திரம் வழங்கும் வைபவத்தில் இவ்வாறு கூறினார். மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர். நாட்டுக்கு அந்நிச் செலாவணியை ஈட்டும் முக்கிய வழி மீன்பிடித் தொழிலுக்கு தனி இடம் உண்டு எனவும், ஏற்றுமதியை அதிகரிப்பதற்கு மீன் வளர்ப்பை விரிவுபடுத்துவதே தனது நோக்கம் எனவும், அதற்காக கடற்றொழில் அமைச்சின் சகல நிறுவனங்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் கடலட்டைக்கு மேலதிகமாக நாட்டின் உள்ளகப் பகுதியில்  நீர்வாழின செய்கை மற்றும் இறால் செய்கையை மேம்படுத்துவதன் மூலம் இந்த தொழிலை நாட்டின் முக்கிய வருமான ஆதாரமாக மாற்ற முடியும் எனவும், இன்று கடலட்டை செய்கையிடுவதற்கு உரிமை பெற்ற உரிமையாளர்கள் இந்த தொழிலை சிறந்த முறையில் முன்னெடுத்து தேசிய வருமானத்துக்கு யாதேனும் ஒத்துழைப்பு வழங்க ஒன்றிணைவார்கள் என்பதே எனது எதிர்பார்ப்பாகும் எனத் தெரிவித்தார்.

இச்சந்தர்ப்பத்தில் கடற்றொழில் திணைக்களம் மற்றும் நீர்வாழின செய்கை நிறுவனத்தின் வட மாகாணத்தின் அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். 

WhatsApp Image 2023 01 09 at 09.10.16

WhatsApp Image 2023 01 09 at 09.10.15 1

WhatsApp Image 2023 01 09 at 09.10.14

சமீபத்திய செய்திகள்

Youtube