இலங்கை தற்போது முகங்கொடுத்த வரும் கடுiமையான பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு மத்தியில் நாட்டுக்கு டெலர்களைப் பெற்றுத் தரக்கூடிய இறால் வளர்ப்பு துறையை அபிவிருத்தி செய்வதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுமென கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
தடை செய்யப்பட்ட கடற்றொழில் முறைகளில் ஒன்றான டைனமைற் மற்றும் வெடிப்பொருட்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் கடற்றொழிலை தடுப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று (10.08.2023) அமைச்சின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது தேரிவித்தார்.
திருகோணமலை உட்பட கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் சட்ட விரோதமான முறையில் வெடிப் பொருட்களைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டு வருவதாக பல மீனவ சங்கங்கள் வேதனையடைவதுடன், அதனை நிறுத்துவதற்கு எடுக்க வேண்டிய வேலைத் திட்டங்கள் பற்றிய கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோர்களுக்கிடையில் 2023.07.26ஆந் திகதி கொழும்பில் நடைபெற்றது.
மீனவர்களின் பெருமையைப் பாதுகாத்து நவீன தொழில்நுட்பத்துடன் மீன்பிடித் தொழிலை முன்னேற்றுவதற்கு அமைச்சு திட்டமிட்டுள்ளதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த டி சில்வா தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகள்
- மீன்பிடித் துறைமுகங்களின் அத்தியாவசியப் பிரச்சினைகளைத் தீர்க்க அமைச்சரவை அங்கீகாரத்துடன் 750 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
- இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரக்குக்குள் அத்துமீறினால் கைதுகள் தொடரும். படகுகள் பறிமுதல் செய்யப்படும். இது விடயத்தில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
- கடல் வளங்களைப் பாதுகாத்து, கரைவலை மீன்பிடித் தொழிலை மேம்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்
- ஏற்றுமதி வருவாயை அதிகரிக்க கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் புதிய திட்டம்
- பிரான்சில் வெற்றிகரமான பேச்சுவார்த்தைகளை முடித்த இலங்கை தூதுக்குழு, கடல்சார் மற்றும் மீன்வள ஒத்துழைப்பை மேம்படுத்த வழிவகை