2023.12.13ஆந் திகதி நாரா நிறுவனத்தில் நடைபெற்ற “இலங்கையின் பொருளாதார வளம் மற்றும் உணவுப் பாதுகாப்பு மற்றும் நிலையான மீன்பிடி நடவடிக்கை” எனும் கருப்பொருளின் கீழ் நாரா நிறுவனத்தில் நடைபெற்ற விஞ்ஞானிகளின் வருடாந்த பருவ அமர்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்இ மீனவ மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சனைகள் மற்றும் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதற்கு நாரா நிறுவனத்தில் சேவையாற்றும் விஞ்ஞானிகளின் இந்த பயிற்சிப் பட்டறையின் ஊடாக கலந்துரையாடுவது முக்கியமான விடயமெனவூம் கடற்றொழில் துறையின் அபிவிருத்திக்கு மற்றும் நாட்டு மக்களின் நல்வாழ்வுக்கு நாரா நிறுவன விஞ்ஞானிகள் பெரும் பங்காற்ற முடியுமென தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.
அமெரிக்க தூதுவர் திருமதி ஜ-லி ஸங்க் அவர்கள் 2023.11.29ஆந் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை கடற்றொழில் அமைச்சில் சந்தித்தார்.
இலங்கையின் கடற் பரப்பில் கடற் தாவரங்கள் வளர்ப்புக்கு பொருத்தமான சூழல் நிலவுவதால் வெளிநாட்டு முலீட்டாளர்கள் பலர் இந்த பிரிவில் முதலிடுவதற்கு பெரும் ஆர்வம் காட்டுகின்றனர்.
மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள எரிபொருள் பிரச்சனை மற்றும் மீன்பிடி உபகரணங்களின் விலையேற்றம் போன்ற அனைத்து பிரச்சனைகள் தொடர்பாக தான் மேன்மைதங்கிய ஜனாதிபதி திரு ரணில் விக்ரமசிங்க அவர்களின் கவனத்துக்கு முன்வைத்துள்ளதாகவும் அவர் அந்த பிரச்சனைகள் அனைத்துக்கும் உடனடியாக தீர்வு பெற்றுத் தருவதாக உறுதியளித்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.
இந்நாட்டு மீன்பிடித் தொழிலில ஈடுபடும் பன்னாள் மீன்பிடிப் படகுகளுக்கு சலுகை விலையில் எரிபொருள் வழங்குவதற்குத் தேவையான வேலைத் திட்டம் தயாரிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் திரு டக்ளஸ் தேவானந்தா மற்றும் IOC கம்பனியின் பிரதிநிதிகளுக்கிடையில் 2023.11.27ஆந் திகதி கடற்றொழில் அமைச்சில் நடைபெற்றது.
சமீபத்திய செய்திகள்
- கடற்றொழில் பிரதி அமைச்சரின் மீலாதுன் நபி தினச் செய்தி!
- கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் மீலாதுன் நபி தினச் செய்தி
- யாழ்ப்பாணத்தில் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆற்றிய உரை
- யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பமாகியது.
- අනුරාධපුර මිරිදිය ධීවර කර්මාන්තය නගා සිටුවීමට ඒකාබද්ධ වැඩපිළිවෙළක්