சீன அரசாங்கத்தினால் நாடளாவிய ரீதியில் உள்ள கடற்றொழிலாளர்களுக்காக வழங்கப்பட்ட மண்ணெண்ணெய் விநியோகிக்கும் சம்பிரதாயபூர்வ நிகழ்வு இன்று (23.05.2023) கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில், இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த மற்றும் இலங்கைக்கான சீன தூதுவர் கீ ஷென்ஹொங் ஆகியோரின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது.
சிலாபம் களப்பு மற்றும் அதனை அண்டிய பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் எடுத்துரைத்தனர்.
இலங்கையின் கடல் வளங்களை அழிக்கும் வகையில் இந்தியக் கடற்றொழிலாளர்கள் இலங்கை கடலில் மேற்கொண்டு வருகின்ற சட்டவிரோதமான இழுவைமடி வலைத் தொழிலை முற்றாக கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளதுடன், இழப்பீடுகள் எவையும் இந்தியப் படகுகளினால் ஏற்படுத்தப்படுகின்ற அழிவுகளுக்கு ஈடாக அமையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மில்ரன் மோட்டர்ஸ் எனப்படும் தனியார் தொழில் முயற்சியாளர்களினால் வடிவமைக்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட மின்கலத்தில் இயங்கும் படகு இயந்திரங்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பார்வையிட்டார்.
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தில் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு நான்காம் கட்ட நட்டஈடாக சுமார் 160.5 கோடி ரூபாய்க்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வு இன்று (11.05.2023) கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையிலும் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வாவின் பங்கேற்புடனும் கடற்றொழில் அமைச்சில் நடைபெற்றது.
சமீபத்திய செய்திகள்
- மீன்பிடித் துறைமுகங்களின் அத்தியாவசியப் பிரச்சினைகளைத் தீர்க்க அமைச்சரவை அங்கீகாரத்துடன் 750 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
- இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரக்குக்குள் அத்துமீறினால் கைதுகள் தொடரும். படகுகள் பறிமுதல் செய்யப்படும். இது விடயத்தில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
- கடல் வளங்களைப் பாதுகாத்து, கரைவலை மீன்பிடித் தொழிலை மேம்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்
- ஏற்றுமதி வருவாயை அதிகரிக்க கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் புதிய திட்டம்
- பிரான்சில் வெற்றிகரமான பேச்சுவார்த்தைகளை முடித்த இலங்கை தூதுக்குழு, கடல்சார் மற்றும் மீன்வள ஒத்துழைப்பை மேம்படுத்த வழிவகை