சர்வதேச மீனவ தினத்தை எதிர்வரும் நவம்பர் மாதம் 21ஆந் திகதி யாழ்ப்பாணத்தில் நடாத்துவதற்கு கடற்றொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது. கடந்த வருடம் களுத்துறை மாவட்டத்தில் நடைபெற்றதுடன், இம்முறை இந்நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடாத்துவது பொருத்தமென கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் திரு பியல் நிஷாந்த அவர்கள் முன்மொழிந்துள்ளார்.
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சிலாபம் மீனவர்களின் பிரச்சனைக்குத் தீர்வு காண நடவடிக்கை
சிலாபம் பிரதேசத்தின் பல மீனவ அமைப்புகள் 2023.09.11ஆந் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களைச் சந்தித்து தமது பிரதேசத்துக்குள் மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் தொடர்பாக பல விடயங்களை முன்வைத்தனர்.
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் பாதிக்கப்பட்ட நீர்கொழும்பு பிரதேசத்தின் ககருவாடு பதனிடும் தொழிலில் ஈடுபடும் மீனவ குழுவினர் 2023.09.04ஆந் திகதி கடற்றொழில் அமைச்சில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களைச் சந்தித்து, தமது தொழிலுக்கு இக்கப்பலினால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து தெரிவித்தனர்.
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் 2023.09.10ஆந் திகதி பேலியாகொட மீன் விற்பனை சந்தைத் தொகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி நடவடிக்கைகளை அவதானிப்பதற்கு விஜயமொன்றை மேற்கொண்டார்
தென் கொரியாவின் முன்னணி வர்த்தகர்களில் ஒருவரான திரு. கங் இலங்கையில் கடற்றொழில் துறையில் முதலீடு செய்வது தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
சமீபத்திய செய்திகள்
- கடற்றொழில் பிரதி அமைச்சரின் மீலாதுன் நபி தினச் செய்தி!
- கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் மீலாதுன் நபி தினச் செய்தி
- யாழ்ப்பாணத்தில் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆற்றிய உரை
- யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பமாகியது.
- අනුරාධපුර මිරිදිය ධීවර කර්මාන්තය නගා සිටුවීමට ඒකාබද්ධ වැඩපිළිවෙළක්