இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம் டிஜிடல்மயமாக்கும் முதற் கட்டமாக வாடிக்கையாளர்கள் கொடுப்பனவுகளுக்கான QR குறியீட்டு முறையின் அறிமுகம் 2023 ஜூன் மாதம் 13ஆந் திகதி கம்பஹா கடற்றொழில் கூட்டுத்தாபன விற்பனை நிலைய வளாகத்தில் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் திரு பியல் நிஸாந்த த சில்வா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
கடற்றொழில் திணைக்களத்தினால் மீன் எற்றுமதி மற்றும் இறக்குமதி அனுமதிப் பத்திரம் வழங்கல், ஏனைய மீன்பிடி உற்பத்தி ஏற்றுமதியின்போதும் மற்றும் இறக்குமதியின்போதும் வழங்கப்படும் அனுமதிப் பத்திரம் மற்றும் மீன்பிடிப் படகுகளுக்கும் வழங்கப்படும் VMS தொழில்நுட்பம் அடங்கலாக ஏனைய அனுமதிப் பத்திரங்களுக்கும் பணம் செலுத்தும் நடவடிக்கை இதன் பின்னர் இலங்கை வங்கியுடன் இணைந்து இணையதளத்தின் ஊடாக கட்டணம் செலுத்துவதற்கான வசதியை அறிமுகப்படுத்தும் வைபவம் 2023.06.16ஆந் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த ஆகியோர்களின் தலைமையில் நடைபெற்றது.
பேலியகொடை மத்திய மீன் சந்தைக்கு 50 கிலோ ஐஸ் கட்டியொன்றை 500 ரூபாவிற்கு விநியோகிக்குமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஐஸ் உற்பத்தியாளர்களுக்கு ஆலோசனை வழங்கியூள்ளார்.
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சமீபத்தில் சிலாபம் கடனீரேரியை அவதானிப்பதற்கு சென்ற சந்தர்ப்பத்தில் தோன்றியுள்ள பிரச்சனைகள் தொடர்பான கலந்துரையாடல் 2023.06.06ஆந் திகதி கடற்றொழில் அமைச்சில் நடைபெற்றது.
சர்வதேச கடற் பகுதியில் மீன்பிடியில் ஈடுபடும் இலங்கை கடற்றொழிலாளர்கள் மற்றும் ஆழ்கடல் படகுகளின் செயற்பாடுகள் மீன்பிடி தொடர்பான சர்வதேச நடைமுறைகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒழுங்கு விதிகள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் டெனிஸ் சைபிஷ் அவர்களுக்கும், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்குமிடையேயான சந்திப்பு இன்று (24.05.2023) கடற்றொழில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
சமீபத்திய செய்திகள்
- கடற்றொழில் பிரதி அமைச்சரின் மீலாதுன் நபி தினச் செய்தி!
- கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் மீலாதுன் நபி தினச் செய்தி
- யாழ்ப்பாணத்தில் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆற்றிய உரை
- யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பமாகியது.
- අනුරාධපුර මිරිදිය ධීවර කර්මාන්තය නගා සිටුවීමට ඒකාබද්ධ වැඩපිළිවෙළක්