
அம்பாறை மாவட்டத்தில் உள்ள அறுகம் குடா சுற்றுலாப் பிரதேசத்தை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ், அப்பகுதியில் தற்போதுள்ள சிறிய படகுத் துறையை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கான பணிகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

இலங்கையின் கடற்றொழில் துறையை டிஜிட்டல்மயமாக்கும் மற்றும் கடல்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்தை வலுப்படுத்தும் முகமாக, அவுஸ்திரேலியாவின் உதவியின் கீழ், சர்வதேச புலம்பெயர்வு ஸ்தாபனம் (IOM) கடற்றொழில் மற்றும் நீர்வளத் திணைக்களத்திற்கு 50 டப்லெட் கருவிகளை நன்கொடையாக வழங்கியது.

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரக்குக்குள் அத்துமீறினால் கைதுகள் தொடரும். படகுகள் பறிமுதல் செய்யப்படும்.
மீனவர்கள் எதிர்நோக்கும் சவால்களுக்கு விரைவான தீர்வுகளை வழங்கும் நோக்கில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தலைமையில் இன்று (ஜூலை 02) அமைச்சின் கேட்போர் கூடத்தில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் தலைமையில், கரைவலை மீன்பிடித் தொழில் தொடர்பான பிரச்சினைகள் குறித்த கலந்துரையாடல் நேற்று (ஜூன் 30) பிற்பகல் 2.00 மணிக்கு பாராளுமன்றத்தின் குழு அறை இலக்கம் 4 இல் நடைபெற்றது.
சமீபத்திய செய்திகள்
- நாட்டின் படகு ஏற்றுமதித் துறைக்கு புத்துயிர் : பேருவளை புதிய படகு இறங்குத்துறையின் செயல்பாடுகளை கடற்றொழில் துறைமுகக் கூட்டுத்தாபனத்திடம் ஒப்படைக்க இணக்கம் - பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் பங்கேற்புடன் விசேட கலந்துரையாடல்
- மாத்தறை மீனவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க விரைவான நடவடிக்கை: ஒதுக்கப்பட்ட பாரிய நிதியை முறையாகப் பயன்படுத்தி மீனவர்களுக்கு அதிகபட்ச சேவையை வழங்குங்கள் - அதிகாரிகளுக்கு பிரதி அமைச்சர் ரத்ன கமகே கடும் அறிவுறுத்தல்
- நாட்டைச் சூழவுள்ள கடற்பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும் : காங்கேசன்துறையிலிருந்து கற்பிட்டி வரை மீன்பிடி நடவடிக்கைகளைத் தவிர்க்கவும் – கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தின் அவசர அறிவிப்பு
- சமுத்திரப் பாதுகாப்பிற்கான சவால்களை வெற்றிகொள்ள சர்வதேச ஒத்துழைப்பு அவசியம் - ஜப்பானில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவிப்பு
- ஹம்பாந்தோட்டை மீனவ சமூகத்தின் பிரச்சினைகளைத் தீர்க்க விரைவான நடவடிக்கை : நிவாரணப் பொதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து பிரதி அமைச்சர் ரத்ன கமகேவிடமிருந்து விசேட அறிவுறுத்தல்கள்





