en banner

WhatsApp Image 2026 05 30 at 12.56.23‘திட்வா’ சூறாவளியினால் வாழ்வாதாரத்தை இழந்த கிழக்கு மாகாண நன்னீர் மீனவ சமூகத்தை மீளக் கட்டியெழுப்புவதையும், அவர்களின் தொழில்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட 1.33 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 436 மில்லியன் ரூபா) மதிப்பிலான விசேட செயற்திட்டத்திற்கான உத்தியோகபூர்வ ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வு, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் தலைமையில் நேற்று (29) கொழும்பிலுள்ள ஜப்பானிய தூதரகத்தில் நடைபெற்றது.

Ditwah Relief Chilaw4‘திட்வா' (Ditwa) சூறாவளியினால் வாழ்வாதார ரீதியாகப் பாதிக்கப்பட்ட புத்தளம் மாவட்டத்தின் 331 சிறு அளவிலான இறால் பண்ணையாளர்கள், மீண்டும் தமது உற்பத்தி நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் பொருட்டு 135.7 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்கும் நிகழ்வு, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் இன்று (29) சிலாபம் ‘சுதசுன’ மண்டபத்தில் நடைபெற்றது.

Ministerபருத்தித்துறை முனை மற்றும் கற்கோவளம் பகுதிகளிலிருந்து கடற்றொழிலுக்காக கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Gandara Harbour6மாத்தறை, கந்தறை மீன்பிடித் துறைமுகத் திட்டத்தின் நிர்மாணப் பணிகளை நிர்ணயிக்கப்பட்ட காலப்பகுதிக்குள் நிறைவு செய்து, மீனவ மக்களுக்கு விரைவாகவும் வினைத்திறனாகவும் சேவைகளை வழங்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்தார்.

galle6காலி மாவட்ட மீனவ சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளைக் கண்டறிந்து அவற்றுக்கு விரைவான தீர்வுகளை வழங்குவதற்காக நடத்தப்படும் "மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின்" இரண்டாவது அமர்வு, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் தலைமையில் நேற்று (27) காலி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.

சமீபத்திய செய்திகள்

Youtube