கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் பிரதி அமைச்சர் ரத்ன கமகே, பதுளை மாவட்டத்தில் நன்னீர் மீன்பிடித் தொழிலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, அந்த மாவட்டத்தில் விரிவான கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டார். இதன்போது பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுதத் பலகல்லவும் இணைந்துகொண்டார்.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷ் ஆகியோருக்கிடையில் இன்று (மே 21) கொழும்பில் அமைச்சகத்தில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் புதிய செயலாளராக கலாநிதி பீ.கே.கோலித கமல் ஜினதாச நியமிக்கப்பட்டுள்ளார்.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளராகப் புதிதாக நியமிக்கப்பட்ட கலாநிதி பீ. கே. கோலித்த கமல் ஜினதாச நேற்று (மே 21) தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
இலங்கை தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் (NAQDA) நடைமுறைப்படுத்தப்படும் "வெவ அபே கம்ஹலய்" திட்டத்தின் கீழ், கடந்த நான்கு மாத காலப்பகுதியில் நாடு முழுவதிலுமுள்ள பருவ கால மற்றும் நிரந்தர நீர்த்தேக்கங்களில் 18 மில்லியன் மீன் குஞ்சுகள் வெற்றிகரமாக இடப்பட்டுள்ளதாக அதன் தலைவர் திரு. கித்சிறி தர்மப்பிரிய தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகள்
- மீன்பிடித் துறைமுகங்களின் அத்தியாவசியப் பிரச்சினைகளைத் தீர்க்க அமைச்சரவை அங்கீகாரத்துடன் 750 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
- இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரக்குக்குள் அத்துமீறினால் கைதுகள் தொடரும். படகுகள் பறிமுதல் செய்யப்படும். இது விடயத்தில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
- கடல் வளங்களைப் பாதுகாத்து, கரைவலை மீன்பிடித் தொழிலை மேம்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்
- ஏற்றுமதி வருவாயை அதிகரிக்க கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் புதிய திட்டம்
- பிரான்சில் வெற்றிகரமான பேச்சுவார்த்தைகளை முடித்த இலங்கை தூதுக்குழு, கடல்சார் மற்றும் மீன்வள ஒத்துழைப்பை மேம்படுத்த வழிவகை