2026 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் ப்ளு எக்கோனமிக் எனப்படுகின்ற நீலப்பொருளாதாரத்துக்குரிய ஆரம்பக்கட்ட நடவடிக்கைக்காக 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்குரிய நடவடிக்கை அடுத்த வருடம் ஆரம்பத்தில் ஆரம்பமாகும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் பீ.கே.கோலித்த கமல் ஜினதாச தெரிவித்தார்.

மீன்பிடித்தொழில்துறையை கட்டியெழுப்புவதற்காக 2026 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அத்துறையை மேம்படுத்துவதற்குரிய எமது வேலைத்திட்டங்கள் சிறப்பாக முன்னெடுக்கப்படும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்தார்.
உலக மீன்பிடி தினத்தை முன்னிட்டு, இலங்கை சர்வதேச மற்றும் தேசிய ரீதியாக சிறு அளவிலான மீன்வள மேலாண்மைத் திட்டங்களை உருவாக்கும் நோக்கில் இரண்டு முக்கிய பயிற்சி பட்டறைகளை நடத்துகின்றது.
மீனவ சமூகத்தின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்குத் தேவையான ஒத்துழைப்பினை அரசாங்கம் பெற்றுக் கொடுக்கும்.

சீன ஹைனான் மாகாண மக்கள் காங்கிரஸின் நிலையியற் குழுவின் பிரதி பணிப்பாளர் யான் ஜிஜுன் அவர்களின் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர் நேற்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரை கடற்றொழில் அமைச்சில் சந்தித்தனர்.
சமீபத்திய செய்திகள்
- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடற்றொழில் துறைக்கு அவுஸ்திரேலியா உதவிக்கரம்; படகுகள் கண்காணிப்பு அமைப்புக்கு தொடர்ச்சியான பங்களிப்பு வழங்கப்படும் எனவும் உறுதி
- சமாதானம், அன்பு மற்றும் புதிய நம்பிக்கைகள் நிறைந்த இனிய நத்தார் வாழ்த்துக்கள்!
- கிறிஸ்துமஸ் திருநாள் அன்பு, சமாதானம் மற்றும் தேசிய ஒற்றுமையின் உயரிய செய்தியை எடுத்துச் செல்கிறது – கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
- மீன்பிடித் துறைக்கு 765 கோடி ரூபாவுக்கும் அதிகமான வெள்ளச் சேதம்; துறையை மீளக் கட்டியெழுப்புவதற்கு அமைச்சர் சந்திரசேகர் விரிவான மீட்புத் திட்டத்தை அறிவித்தார்.
- அனர்த்தத்தின் பின்னர் கடற்றொழில் துறையை மீளக்கட்டியெழுப்ப ஜப்பானிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் (JICA) ஆதரவு!





