கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் அமைச்சின் செயலாளர் கலாநிதி பீ.கே. கோலித கமல் ஜினதாஸ ஆகியோர் டென்மார்க்கிற்கான தங்களது உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, கடந்த 24 ஆம் திகதி அந்நாட்டின் முன்னணி வர்த்தக மற்றும் முதலீட்டு நிறுவனங்களின் பிரதானிகளுடன் விசேட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர்.
நோர்வே நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையிலான இலங்கைத் தூதுக்குழுவினர், நோர்வேயின் வர்த்தகம், கைத்தொழில் மற்றும் கடற்றொழில் அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் நேற்று (23) ஒஸ்லோ நகரில் விசேட கலந்துரையாடல்களை நடத்தினர்.

நோர்வேயின் பெர்கன் (Bergen) நகரில் நடைபெற்று வரும் ‘One Ocean Week’ சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்டுள்ள கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையிலான குழுவினர், உலகின் முன்னணி நீர்வாழ் உயிரின வளர்ப்பு மற்றும் மீன் தீவன உற்பத்தி நிறுவனமான கார்கில் (Cargill) நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் தர்ஜே ஈட் (Tarjei Eide) உள்ளிட்ட உயர்மட்ட நிர்வாகத்தினருடன் நேற்று (21) விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
நோர்வேயின் பெர்கன் (Bergen) நகரில் நடைபெற்று வரும் ‘One Ocean Week’ சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டுள்ள கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையிலான இலங்கைத் தூதுக்குழுவினர், பெர்கன் மாகாண சபைத் தலைவி (Chief of County Council) கிறிஸ்டின் பி. மேயர் (Christine B. Meyer) உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவுடன் நேற்று (21) விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
அரபுக் கடலில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக புறப்பட்டுச் செல்லும் மற்றும் மீன்பிடி நடவடிக்கைகளை முடித்துக்கொண்டு மீண்டும் கரை திரும்பும் அனைத்து பலநாள் மீன்பிடிக் கலன்களும், மாலைதீவின் பிரத்தியேக பொருளாதார வலயத்தை (EEZ) கடக்கும்போது பின்பற்ற வேண்டிய புதிய நடைமுறைகளை கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
சமீபத்திய செய்திகள்
- நாட்டின் படகு ஏற்றுமதித் துறைக்கு புத்துயிர் : பேருவளை புதிய படகு இறங்குத்துறையின் செயல்பாடுகளை கடற்றொழில் துறைமுகக் கூட்டுத்தாபனத்திடம் ஒப்படைக்க இணக்கம் - பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் பங்கேற்புடன் விசேட கலந்துரையாடல்
- மாத்தறை மீனவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க விரைவான நடவடிக்கை: ஒதுக்கப்பட்ட பாரிய நிதியை முறையாகப் பயன்படுத்தி மீனவர்களுக்கு அதிகபட்ச சேவையை வழங்குங்கள் - அதிகாரிகளுக்கு பிரதி அமைச்சர் ரத்ன கமகே கடும் அறிவுறுத்தல்
- நாட்டைச் சூழவுள்ள கடற்பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும் : காங்கேசன்துறையிலிருந்து கற்பிட்டி வரை மீன்பிடி நடவடிக்கைகளைத் தவிர்க்கவும் – கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தின் அவசர அறிவிப்பு
- சமுத்திரப் பாதுகாப்பிற்கான சவால்களை வெற்றிகொள்ள சர்வதேச ஒத்துழைப்பு அவசியம் - ஜப்பானில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவிப்பு
- ஹம்பாந்தோட்டை மீனவ சமூகத்தின் பிரச்சினைகளைத் தீர்க்க விரைவான நடவடிக்கை : நிவாரணப் பொதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து பிரதி அமைச்சர் ரத்ன கமகேவிடமிருந்து விசேட அறிவுறுத்தல்கள்





