கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்சார் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே, அண்மையில் (மார்ச் 24) சீனாவின் குவாங்சூவில் (Guangzhou) அமைந்துள்ள தென் சீன கடல் கடல்சார் ஆய்வு நிறுவனத்தில் (SCSIO) நடைபெற்ற "வெப்பமண்டல கடல்சார் சுற்றுச்சூழல் மாற்றங்கள் குறித்த சீன-இலங்கை கல்வி மன்றத்தில்" (China-Sri Lanka Academic Forum on Tropical Marine Environmental Changes) இலங்கை அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்டார்.
பங்களாதேஷ் கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக பிரவேசித்த குற்றச்சாட்டில் சுமார் எட்டு மாதங்களாக அந்த நாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஆறு இலங்கை மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குறித்த ஆறு பேரும் நாளை (ஏப்ரல் 02) இலங்கையை வந்தடையவுள்ளனர்.
சீன மக்கள் குடியரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் அழைப்பிற்கு இணங்க, மார்ச் 25 முதல் 27 வரை பெய்ஜிங்கில் நடைபெற்ற ‘ZGC 2026 Forum Annual Conference’ சர்வதேச மாநாட்டில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே கலந்துகொண்டார்.
இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே பிரான்சே (Mr. Marc-André Franche) மற்றும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று (30) அமைச்சில் நடைபெற்றது.
நாட்டின் தற்போதைய விசேட சூழ்நிலை குறித்து ஜனாதிபதியுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் பின்னர் புதன்கிழமை விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்ட போதிலும், கடற்றொழில் துறையுடன் தொடர்புடைய அத்தியாவசிய சேவைகள் அனைத்தும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே. கோலித கமல் ஜினதாச தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகள்
- கடற்றொழில் துறையில் டிஜிட்டல் புரட்சியின் ஆரம்பம்!
- பேருவளையில் புதிய படகு இறங்குதளம் திறப்பு: 2030 ஆம் ஆண்டளவில் 36 பில்லியன் டொலர் ஏற்றுமதி இலக்கை நோக்கிய பயணத்தில் புதிய பாதை திறக்கப்படுகிறது - அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி
- இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் விநியோக வலையமைப்பை வலுப்படுத்த ஜப்பானிடமிருந்து 200 மில்லியன் ரூபா பெறுமதியான 06 குளிரூட்டப்பட்ட வாகனங்கள்
- நாட்டின் படகு ஏற்றுமதித் துறைக்கு புத்துயிர் : பேருவளை புதிய படகு இறங்குத்துறையின் செயல்பாடுகளை கடற்றொழில் துறைமுகக் கூட்டுத்தாபனத்திடம் ஒப்படைக்க இணக்கம் - பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் பங்கேற்புடன் விசேட கலந்துரையாடல்
- மாத்தறை மீனவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க விரைவான நடவடிக்கை: ஒதுக்கப்பட்ட பாரிய நிதியை முறையாகப் பயன்படுத்தி மீனவர்களுக்கு அதிகபட்ச சேவையை வழங்குங்கள் - அதிகாரிகளுக்கு பிரதி அமைச்சர் ரத்ன கமகே கடும் அறிவுறுத்தல்





